Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | செயற்கைக் கோள்களின் சுற்றுக்காலம்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : அண்டம்

செயற்கைக் கோள்களின் சுற்றுக்காலம்

புவியை ஒரு முறை முழுமையாக சுற்றி வர ஒரு செயற்கைக்கோள் எடுத்துக்கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்.

செயற்கைக் கோள்களின் சுற்றுக்காலம்

புவியை ஒரு முறை முழுமையாக சுற்றி வர ஒரு செயற்கைக்கோள் எடுத்துக்கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்.

சுற்றுக்காலம் T = கடந்த தொலவு / சுற்றியக்கத் திசைவேகம்

T = 2πr / v

v ன் மதிப்பை பிரதியிட,


 

கணக்கீடு 2

500 கிமீ உயரத்தில் ஒரு செயற்கைக்கோளின் சுற்றுக்காலத்தைக் காண்க.

தீர்வு

 h = 500 × 103மீ,

R = 6371 × 103மீ,

v =7616× 103மீவி-1

T = 2π(R + h) / v = 2 × 22 / 7 × (6371 + 500) / 7616

= 5.6677 × 103 வி = 5667 வி.

அதாவது T ≈  95 நிமிடங்கள்

செயல்பாடு 4

ஆரியபட்டாவில் தொடங்கி தற்போது செலுத்தப்பட்டது வரையிலான செயற்கைக் கோள்கள் மற்றும் அவற்றின் நோக்கங்களைப் பட்டியலிடுக.

உங்களுக்குத் தெரியுமா?

அனைத்து விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றினாலும் ஒரே ஒரு விண்மீன் மட்டும் நகராமல் உள்ளதுபோல் தெரியும். அது துருவ விண்மீன் என்று அழைக்கப்படுகிறது. நிலையாக அமைந்துள்ள புவியின் சுழல் அச்சிற்கு நேராக அமைந்திருப்பதால், துருவ விண்மீன் ஒரே இடத்தில் உள்ளது போல் தோன்றுகிறது. புவியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து துருவ விண்மீன் தெரிவதில்லை.

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : அண்டம்