Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | ஒரு நாளிலுள்ள நேரங்கள்

நேரம் | மூன்றாம் பருவம் அலகு 6 | 3 ஆம் வகுப்பு கணக்கு - ஒரு நாளிலுள்ள நேரங்கள் | 3rd Maths : Term 3 Unit 6 : Time

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : நேரம்

ஒரு நாளிலுள்ள நேரங்கள்

வானத்தைப் பாருங்கள். ஒரு நாள் முழுவதும் ஒரே மாதிரி உள்ளதா? சில சமயங்களில் (நேரங்களில்) சூரியன் பளிச்சிடுகிறது. சில நேரங்களில் நிலவும் நட்சத்திரங்களும் மின்னுகின்றன.

அலகு 6

நேரம்



ஒரு நாளிலுள்ள நேரங்கள் 

வானத்தைப் பாருங்கள். ஒரு நாள் முழுவதும் ஒரே மாதிரி உள்ளதா? 

சில சமயங்களில் (நேரங்களில்) சூரியன் பளிச்சிடுகிறது. சில நேரங்களில் நிலவும் நட்சத்திரங்களும் மின்னுகின்றன. 

சூரியன் பளிச்சிடும் பொழுதைப் பகல் எனவும் நிலவும் நட்சத்திரங்களும் மின்னும் பொழுதை இரவு எனவும் அழைக்கிறோம். 

பகல் பொழுது 12 மணி நேரமும் இரவுப் பொழுது 12 மணிநேரமும் சேர்ந்து 24 மணி நேரம் கொண்டது ஒரு நாள் ஆகிறது.



1. பின்வரும் நிகழ்வுகள் நிகழும் நேரத்தைப் பொருத்து வகைப்படுத்துக. 

1. சூரிய உதயம் 

2. சூரியன் மறையும் நேரம் 

3. பள்ளிக்கு வரும் நேரம் 

4. பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும் நேரம் 

5. காலைச் சிற்றுண்டி 

6. இரவு உணவு 

7. இருளாக இருக்கும் நேரம் 

8. நாம் காலை வணக்கம் சொல்லும் நேரம் 

9. நாம் மாலை வணக்கம் சொல்லும் நேரம்





3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : நேரம்