Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | திசு மற்றும் திசுத்தொகுப்பு - முக்கியமான கேள்விகள்

தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு - முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 9 : Tissue and Tissue System

11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு

திசு மற்றும் திசுத்தொகுப்பு - முக்கியமான கேள்விகள்

மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள், கேள்விக்கு பதிலளிக்கவும்
தாவர உள்ளமைப்பியல்

திசு மற்றும் திசுத்தொகுப்பு

மதிப்பீடு

 

1. கீழ்கண்ட படத்தினை உற்றுநோக்கிச் சரியான விடையைத் தேர்ந்தெடு.


i. A,B மற்றும் தண்டு நுனியின்ஹிஸ்டோஜென் கொள்கை ஆகும்.

ii. A - மெடுல்லா, கதிர்களை உருவாக்குகிறது

iii. B- புறணியை உருவாக்குகிறது

iv. C - புறத்தோலை உருவாக்குகிறது

அ). I மற்றும் ii மட்டும்

ஆ). ii மற்றும் iii மட்டும்

இ). i மற்றும் iii மட்டும்

ஈ). iii மற்றும் iv மட்டும்

 

2.  கீழ்கண்டவற்றைபடித்து சரியான விடையைத் தேர்ந்தெடு

i. எக்ஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு வெளியே புரோட்டோசைலம் அமைந்துள்ளது

ii. எண்டார்க் எனப்படுவது புரோட்டோசைலம் மையத்தை நோக்கி அமைந்துள்ளது

iii. சென்ட்ரார்க் எனப்படுவது புரோட்டோசைலத்திற்கு நடுவில் மெட்டாசைலம் அமைந்துள்ளது

iv. மீஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு நடுவில் புரோட்டோசைலம் அமைந்துள்ளது.

அ). i, ii மற்றும் iii மட்டும்

ஆ). ii, iii மற்றும் iv மட்டும்

இ). i, ii மற்றும் iv மட்டும்

ஈ). இவை அனைத்தும்.

 

3.  ஜிம்னோஸ்பெர்ம்களில் சல்லடை செல்கள்களைக் கட்டுப்படுத்துவது எது?

அ) அருகாமையில் உள்ள சல்லடை குழாய்கள்.

ஆ) ஃபுளோயம் பாரங்கைமா செல்கள்.

இ) துணைச்செல்களின் உட்கருக்கள்

ஈ) அல்புமீனஸ் செல்களின் உட்கருக்கள்.

 

4.  இருவிதையிலைத் தண்டில் வாஸ்குலக் கற்றையிலிருந்து இலை இழுவை நீட்டிக்கப்படும் பொழுது, இலை நரம்பின் வாஸ்குலத் திசுக்கள் எவ்வாறு அமைந்து இருக்கும்?

அ) சைலம் மேல்புறத்திலும் ஃபுளோயம் கீழ்புறத்திலும் இருக்கும்.

ஆ) ஃபுளோயம் மேல்புறத்திலும் சைலம் கீழ்புறத்திலும் இருக்கும்.

இ) சைலம் ஃபுளோயத்தை சூழ்ந்திருக்கும்.

ஈ) ஃபுளோயம் சைலத்தை சூழ்ந்திருக்கும்.

 

5.  இருவிதையிலைத் தாவரங்களில் ஒட்டுப்போடுதல் வெற்றிகரமாக உள்ளது. ஆனால், ஒருவிதையிலைத் தாவரங்களில் அவ்வாறு இல்லை. ஏனென்றால், இருவிதையிலை தாவரங்களில்.

அ) வளையமாக வாஸ்குலக் கற்றைகள் அமைந்திருப்பது

ஆ) இரண்டாம் நிலை வளர்ச்சிக்கான கேம்பியம் அமைந்துள்ளது.

இ) சைலக்குழாய் கூறுகள் ஒருமுனையில் இருந்து அடுத்த முனை வரை இணைந்து அமைந்திருப்பது.

ஈ) கார்க் கேம்பியம் அமைந்திருப்பது.

 

6.  ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?

 

7.  ஸ்கிலிரைடுகளின் வகைகளை விவரி.

 

8. சல்லடை குழாய்கள் என்றால் என்ன ? விளக்குக.

 

9.  இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக

 

10.  இருவிதையிலை தண்டிற்கும், ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.



11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு