Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | செல்லின் வகைகள்

செல் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - செல்லின் வகைகள் | 6th Science : Term 2 Unit 5 : The Cell

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்

செல்லின் வகைகள்

பொதுவாக செல்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை தெளிவற்ற உட்கருவைக் கொண்ட புரோகேரியாட்டிக் செல்கள் மற்றும் தெளிவான உட்கருவைக் கொண்ட பூகேரியாட்டிக் செல்கள் ஆகும்.

செல்லின் வகைகள்

பொதுவாக செல்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை தெளிவற்ற உட்கருவைக் கொண்ட புரோகேரியாட்டிக் செல்கள் மற்றும் தெளிவான உட்கருவைக் கொண்ட பூகேரியாட்டிக் செல்கள் ஆகும்.

 

புரோகேரியாட்டிக் செல்கள்

போன்ற ஒரு செல் நுண்ணியிரிகளில் புரோகேரியாட்டிக்செல்கள் பாக்டீரியா காணப்படுகின்றன. இவை தெளிவான உட்கருவினைக் கொண்டிருக்காது. இவற்றின் உட்கரு நியூக்ளியாய்டு அழைக்கப்படுகின்றது. என இச்செல்களின் நுண்ணுறுப்புகளைச் சுற்றி சவ்வுகள் காணப்படுவதில்லை.

இப்புவியில் முதன்முதலில் உருவான செல் புரோகேரியாட்டிக் செல் ஆகும். இவை 0.003 மைக்ரோமீட்டர் முதல் 2.0 மைக்ரோமீட்டர் வரையிலான விட்டம் கொண்டவை.

எ.கா: எக்ஸெரிச்சியா கோலை பாக்டீரியா.


 

யூகேரியாட்டிக் செல்கள்

தெளிவான உட்கருவைக் கொண்டுள்ள செல்கள் யூகேரியாட்டிக் செல்கள் என அழைக்கப்படுகின்றன. இவை புரோகேரியாட்டிக் செல்களைவிட அளவில் பெரியவை. இவை சவ்வினால் சூழப்பட்ட நுண்உறுப்புகளைக் கொண்டுள்ளன.

எ.கா: தாவர செல்கள், விலங்கு செல்கள், பெரும்பான்மையான பூஞ்சைகள் மற்றும் ஆல்காக்கள்.



செயல்பாடு 2:

நோக்கம்:

வெங்காயத் தோலை உரித்து, அதை நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தல்

தேவையான பொருட்கள்:

கண்ணாடி ஸ்லைடு (நழுவம்) கண்ணாடி மென்தகடு, வெங்காயம், அயோடின் கரைசல், கத்தி, இடுக்கி மற்றும் நுண்ணோக்கி

செயல்முறை:

ஒரு வெங்காயத்தை எடுத்து அதை நீள வாக்கில் ரெண்டு துண்டுகளாக வெட்டவும். அதிலிருந்து சதைப்பற்றுள்ள இலையை எடுத்து, அதன் உட்பக்கமுள்ள ஒளி ஊடுவக் கூடிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியை பிரிக்கவும். கண்ணாடி நழுவத்தை எடுத்து, அதில் ஒரு துளிநீரை விட்டு, அந்நீரில் இச்சவ்வை வைக்கவும் அதன் மீது ஒரு துளி அயோடின் கரைசலை இடவும். கண்ணாடி மென் தட்டால் இதை மூடி, நுண்ணோக்கியில் வைத்து பார்க்கவும்.

காண்பன :

நுண்ணோக்கியில் வெங்காயத் தோலில் உள்ள செவ்வக வடிவ செல்லினை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு செல்லிலும் நியூக்ளியஸ் இருப்பதையும் நாம் காணலாம்.




6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்