Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | வறுமையும், வேலையின்மையும் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

வறுமையும், வேலையின்மையும் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

நாட்டளவில் வேலைவாய்ப்பின்மை அளவின் சராசரி 50 (1000ம் பேருக்கு) ஆக உள்ளது. தமிழ்நாட்டில் 1000க்கு 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர்.

வறுமையும், வேலையின்மையும்

நாட்டளவில் வேலைவாய்ப்பின்மை அளவின் சராசரி 50 (1000ம் பேருக்கு) ஆக உள்ளது. தமிழ்நாட்டில் 1000க்கு 42 பேர் வேலையில்லாமல் உள்ளனர். தேசிய அளவில் தமிழகம் 22வது இடத்திலுள்ளது. பலவகையான வேலையின்மை பொருளாதார நிலைக்கேற்ப உள்ளது. அவற்றை முழுமையாக அறிவதன் மூலமே வேலைவாய்ப்பைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு இந்தியாவின் வளமான மாநிலங்களில் ஒன்றாகும். 1994 லிருந்து நமது மாநிலம் வறுமையில் நிலையான சரிவை சந்தித்து வருகிறது. பல மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வறுமையின் அளவு குறைவாக உள்ளது. சேவைத்துறை வளர்ச்சியின் விளைவாக 2005 க்குப் பிறகு இந்தியாவின் மிக வேகமாக வளரும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது.


தமிழ்நாடு - வறுமை பிற மாநிலங்களுடன் ஒப்பீடு 







தொகுப்புரை

தமிழக பொருளாதாரம் வளமான இயற்கை வளங்களைக் கொண்ட மாநிலமாக இல்லாத போதும் வேளாண் துறை வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது. வங்கி, கல்வி, போக்குவரத்தது மற்றும் சுற்றுலா துறைகளில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு நலக் குறியீடு, கல்வி மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது. வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குதலில் நல்ல முன்னேற்றம் கொண்டுள்ளது. இருப்பினும் இந்தியா முழுமைக்கும் தமிழ்நாடு உட்பட சில பணிகளை இன்னும் செய்யவேண்டியுள்ளது. பெண் சிசு கொலை, குடிசைப் பகுதியில் வாழும் மக்கள், சாலையோரம் படுத்திருப்போர், யாசகம் கேட்போர், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் போன்றவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மேற்கண்டவற்றை சரிசெய்யாமல் முன்னேற்றம் என்பது பொருளற்றதாகி விடும்.


பிற்சேர்க்கை -1


தமிழ்நாட்டு மக்கள் தொகை வளர்ச்சி (2011 கணக்கெடுப்பின் படி)

மொத்த மக்கள் தொகை - 72138958 

ஆண்கள் - 36158871 

பெண்கள் - 35980087 

தோராய பிறப்பு விகிதம் (ஆயிரத்துக்கு) - 15.7 

தோராய இறப்பு விகிதம் (ஆயிரத்துக்கு) - 7.4 .

வளர்ச்சி விகிதம் (ஆயிரத்துக்கு) - 8.3 

அதிக மக்கள் தொகையுடைய மாவட்டங்கள் - சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவாரூர் 

குறைவான மக்கள் தொகையுடைய மாவட்டங்கள் - பெரம்பலூர், நீலகிரி, அரியலூர், தேனி

மக்கள் தொகை அடர்த்தி    -   (சதுர கிலோ மீட்டருக்கு) 555 (2011) - 480(2001)

மிக அதிக அடர்த்தி  -  சென்னை (26903), கன்னியாகுமரி (1106)

குறைவான அடர்த்தி உள்ள மாவட்டம் - நீலகிரி (288), திருச்சிராப்பள்ளி (602)

பாலின விகிதம் (1000 ஆண்களுக்கு) - 995 பெண்கள் (2011), 987 பெண்கள் (2001)

அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள் - நீலகிரி (1041 பெண்கள்) கன்னியாகுமரி (1031 பெண்கள்) நாகப்பட்டினம் (1025 பெண்கள்)

குறைவான பாலின விகிதம் உடைய மாவட்டங்கள் - தேனி (900 பெண்கள்) தர்மபுரி (946 பெண்கள்)

குழந்தை பாலின விகிதம் (0-6 வயதுக்குட்பட்ட) - 946 பெண் குழந்தைகள் (2011) 942 பெண் குழந்தைகள் (2001)

அதிக குழந்தை பாலின விகிதம் கொண்ட மாவட்டங்கள் - நீலகிரி (985), கன்னியாகுமரி (964)

குறைவான குழந்தை பாலின விகிதம் கொண்டமாவட்டங்கள் - கடலூர் (896), அரியலூர் (897)

எழுத்தறிவு விகிதம் - 80.33% - (2011) 73.45% (2001)

ஆண் எழுத்தறிவு விகிதம்  - 86.81% - (2011) 82.33% (2001)

பெண் எழுத்தறிவு விகிதம் - 73.86% - (2011) 64.55% (2001)

அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள் - கன்னியாகுமரி (92.14%) சென்னை (90.33%)

குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டங்கள் - தருமபுரி (64.71%), அரியலூர் (71.99%)



சொற்களஞ்சியம்

தனி நபர் வருமானம் (ஒரு தனிநபரின் வருமானம்)

= ஒரு குறிப்பிட ஆண்டின் மொத்த மாநில உள் நாட்டு உற்பத்தி / அதே ஆண்டின் மாநில மக்கள் தொகை


GSDPமொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி

மாநிலத்தில் ஓர் ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு 

சிசு இறப்பு வீதம்

ஒரு வயது நிறைவடையும் முன் இறக்கும் பச்சிளங் குழந்தைகளின் எண்ணிக்கை (1000 க்கு

குழந்தை இறப்பு வீதம்

ஐந்து வயது நிறைவடையும் முன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை (1000 க்கு) .

கடன்வைப்பு வீதம் 

வங்கிக் கடன்களுக்கும் வைப்புகளுக்கும் உள்ள விகிதம்

உயிரி எரிபொருள்

காட்டாமணக்கு வகை தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் 

MSMEs

குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் 

குறு நிறுவனங்கள்

25 இலட்சத்திற்கு மிகாமல் மூலதன முதலீடு கொண்ட நிறுவனங்கள் 

சிறு நிறுவனங்கள்

25 இலட்சத்திற்கும் அதிகமாக ஆனால் 10 கோடிக்கும் குறைவான மூலதன முதலீடு கொண்ட நிறுவனங்கள்

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்