Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | வேற்றுமையில் ஒற்றுமை

பன்முகத் தன்மையினை அறிவோம் | பருவம் 1 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வேற்றுமையில் ஒற்றுமை | 6th Social Science : Civics : Term 1 Unit 1 : Understanding Diversity

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 1 : பன்முகத் தன்மையினை அறிவோம்

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியாபன்முகத்தன்மை நிறைந்தநாடாக இருப்பினும் "நாட்டுப்பற்று" என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியாபன்முகத்தன்மை நிறைந்தநாடாக இருப்பினும் "நாட்டுப்பற்று" என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். நம் நாட்டின் சின்னங்களான தேசியக்கொடி, தேசிய கீதம் ஆகியவை நமது தாய்நாட்டையும், அதற்காக நாம் ஒன்று பட்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்கள் தேசிய விழாக்களாக நம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. இவையே நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும் நம் நாட்டுப்பற்றினையும் உயிர்ப்பிக்கச் செய்து கொண்டு இருக்கின்றன.

உங்களுக்குக் தெரியுமா?

இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" உள்ள நாடாக விளங்குகிறது. இச்சொற்றொடரானது நமது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் "டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா ஒரு பன்முக பண்பாட்டு சமுதாயத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பொதுவான நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், பண்பாட்டு மையங்கள் போன்றவற்றின் வாயிலாக நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வால், ஓரே தேசத்தால் ஒன்றுபட்டு உள்ளோம். நமது விடுதலைப்போராட்டங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியாவின் ஒற்றுமைக்கு சான்றாக திகழ்கின்றன. 

உங்களுக்குக் தெரியுமா?

இந்தியாவில் பல்வேறு இன மக்கள் காணப்படுவதால், இந்தியாவை "இனங்களின் அருங்காட்சியகம் என வரலாற்றாசிரியர் வி.ஏ. ஸ்மித் அவர்கள் கூறியுள்ளார்.

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 1 : பன்முகத் தன்மையினை அறிவோம்