Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | மாறியின் வரையெல்லை

12 வது கணினி அறிவியல் : அலகு 3 : வரையெல்லை

மாறியின் வரையெல்லை

நிரலாக்க மொழியில் உள்ள மாறிகளின் வரையெல்லையை அறிந்து கொள்வதற்கு மாறிளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்அவசியம். முக்கியமாக, இவைகள் நினைவகத்தில் உள்ள ஒரு பொருளின் முகவரியாகும்.

மாறியின் வரையெல்லை

நிரலாக்க மொழியில் உள்ள மாறிகளின் வரையெல்லையை அறிந்து கொள்வதற்கு மாறிளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியம். முக்கியமாக, இவைகள் நினைவகத்தில் உள்ள ஒரு பொருளின் முகவரியாகும். (குறிப்புகள் (அ) சுட்டுகள்) ஒரு பொருளுக்கு ஒரு மாறியை : =குறியுடன் இருத்தும்போது மாறியும் பொருளும் ஒன்றாகப் பிணைக்கப்படுகிறது. ஒன்றிக்கு மேற்பட்ட மாறிகளுக்கு மதிப்புகள் இருக்க முடியும் (Map).

குறிப்பு

மாறியின் பெயரை ஒரு பொருளுடன் பிணைக்கும் செயல்முறையே மேப்பிங் (Mapping) எனப்படும். := என்ற குறியீடு செயல்குறி நிரலாக்க மொழியில் மாறி மற்றும் பொருளை = (சமக்குறி) (Map) இருக்கிறது.

நிரலாக்க மொழி இதைப்போன்ற அனைத்து மேப்பிங்களையும் namespaces உடன் கண்காணிக்கிறது. namespaces என்பது மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான கொள்கலனாகும். இவைகளை Dictionary, சொற்களைக் கொண்ட List மற்றும் அதற்கான அர்த்தங்களாகவும் எடுத்துக் கொள்ளலாம். Dictionary-ல் வார்த்தைகள் அதன் அர்த்தங்களுடனும், பெயர்கள் பொருள்களுடனும் (name:=object) மேப் செய்யப்பட்டுள்ளன. இது நீங்கள் தேர்வு செய்த பெயரால் பொருளை அணுக அனுமதிக்கிறது. பின்வரும் எடுத்துக்காட்டில் a என்பது 5 என்ற முழு எண்ணுடன் முதலில் மேப் செய்யப்படுகிறது. இங்கு a என்பது மாறியின் பெயர். முழு எண் மதிப்பு 5 என்பது பொருளாகும். பின்னர், a என்பது b-ல் இருத்தப்படுகிறது. அதாவது, b என்பது a-ல் உள்ள அதே முழு எண் மதிப்பாகிறது.

மேப்பிங்

1.a:= 5

2.b:=a


மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சில மாற்றத்தை கீழே வருமாறு காண்போம்.

1.a:=5

2.b:=a

3.a:=3

அதன் பிறகு a-ன் மதிப்பை 3 என மாற்றினால் தொடக்க நிரலர் b-ன் மதிப்பும் 3 என மாறும் என்று கருதுவார். ஆனால், b-ன் மதிப்பு தற்பொழுதும் 5 என்ற முழு எண் மதிப்பாகவே இருக்கும். a-ன் மதிப்பு மட்டுமே 3 என்ற முழு எண் மதிப்பாக மாற்றம் பெற்றிருக்கும்.

a-வின் மதிப்பை மாற்றிய பிறகு மேப்பிங்


மாறியின் வரையெல்லை என்பது அது குறிமுறையில் எங்கு புலப்படுகிறதோ அல்லது காணப்படுகிறதோ அந்தப் பகுதியாகும். அதை அணுகுவதற்கு எந்த முன்னொட்டையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு எடுத்துக்காட்டு,

1. Disp():

2. a:=7

a-வின் மதிப்பை குறிமுறைக்கு வெளியே காண்பிக்க முற்படும்போது நிரல் "name ‘a' is not defined” என்ற பிழைச் செய்தியை வெளியிடும். ஏனெனில், மாறியின் வாழ்நாள் குறிமுறையின் இறுதிவரை மட்டுமே ஆகும். ஒரு மாறி குறிமுறையில் பயன்படும் நேரமே அதனுடைய வாழ்நாள் 'Life time' எனப்படும். 

12 வது கணினி அறிவியல் : அலகு 3 : வரையெல்லை