பருவம் 1 இயல் 1 | 2 ஆம் வகுப்பு தமிழ் - விளையாட்டு உலகம் | 2nd Tamil : Term 1 Chapter 1 : Vilayattu ulagam

1. விளையாட்டு உலகம்
பட்டம் பறக்குது!
வண்ணப் பட்டம் பறக்குது
வளைந்து நெளிந்து பறக்குது
மெல்ல மெல்லத் தலையையாட்டி
மேலும் கீழும் பறக்குது
வானில் பட்டம் பறக்குது
வாலை ஆட்டிப் பறக்குது
அங்கும் இங்கும் ஆடியசைந்து
அழகாய் மேலே பறக்குது
வீசும் காற்றில் பறக்குது
வித்தை காட்டிப் பறக்குது
வட்டம் அடிக்கும் பறவையோடு
போட்டி போட்டுப் பறக்குது
பாடலைக் கேட்டு மகிழ்க. பின்தொடர்ந்து பாடுக.
அறிந்த பாடல்களைத் தனியாகவும் குழுவாகவும் பாடுக.






