Home | 2 ஆம் வகுப்பு | 2வது தமிழ் | விட்டுச் செல்லாதே: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 7 | 2 ஆம் வகுப்பு தமிழ் - விட்டுச் செல்லாதே: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 1 Chapter 7 : Vitu selathey

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 7 : விட்டுச் செல்லாதே

விட்டுச் செல்லாதே: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 7 : விட்டுச் செல்லாதே: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

சொன்னது யார்? பொருத்துக

1. கயல் என்னை எடுக்காமல் சென்றுவிட்டாள் – பாத்திமா

2. எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே - கயல்

3. இங்கேயும் இல்லையே - முத்து

4. இங்கேதானே வைத்தேன் - கரிக்கோல்

5. எங்கே போனது? – அழிப்பான்

விடை:

1. கயல் என்னை எடுக்காமல் சென்றுவிட்டாள் – கரிக்கோல்

2. எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே - அழிப்பான்

3. இங்கேயும் இல்லையே - பாத்திமா

4. இங்கேதானே வைத்தேன் - கயல்

5. எங்கே போனது? - முத்து

 

வாய்மொழியாக விடை தருக

1. கரிக்கோல், துருவி, அழிப்பான் இவை மூன்றும் என்னென்ன நினைத்து வருத்தப்பட்டன?

கரிக்கோல்: கயல் எழுதும்போது என்னைத் தேடுவாளே

துருவி: கரிக்கோல் கூராக இருந்தால் தான் முத்துவுக்குப் பிடிக்கும்

அழிப்பான்: பாத்திமாவும் எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே என்று வருத்தப்பட்டன.

 

விடை எழுதுக

1. வகுப்பில் யார் யார் என்னென்ன பொருள்களை விட்டுச் சென்றனர்?

கயல் – கரிக்கோல்

முத்து – துருவி

பாத்திமா - அழிப்பான்

ஆகிய பொருள்களை வகுப்பில் விட்டுச் சென்றனர்.

 

2. விட்டுச்சென்ற பொருள்கள் உரியவர்களுக்குக் கிடைத்தனவா? எப்போது?

ஆமாம். விட்டுச்சென்ற பொருள்கள் உரியவர்களுக்கு மறுநாள் கிடைத்தன.



பொருத்தமான சொல்லை எழுதி நிரப்புக

(அது, அவன், அவள், அவை, அவர்கள்)

1. மதி ஒளி இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவள் அழகாக ஓவியம் வரைகிறாள்.

2. வளவன் மிதிவண்டி ஓட்டுகிறான். அவன் கடைக்குச் செல்கிறான்.

3. பயணிகள் பேருந்தில் ஏறுகின்றனர். அவர்கள் சுற்றுலா செல்கின்றனர்.

4. பூனை பால் குடிக்கிறது. அது எலியைப் பிடிக்கும்.

5. கதைப் புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவை அத்தை வாங்கித் தந்தவை.





2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 7 : விட்டுச் செல்லாதே