நமது சுற்றுச்சூழல் | பருவம் 3 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - கழிவுப் பொருள் மேலாண்மை மற்றும் மறு சுழற்சி | 6th Science : Term 3 Unit 4 : Our Environment
கழிவுப் பொருள் மேலாண்மை மற்றும் மறு சுழற்சி
சூழ்நிலை மண்டலத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் கழிவுப்பொருள்களைக்
குறைக்க வேண்டும் அல்லது சரியான முறையில் இவற்றைக் கையாண்டு மறுசுழற்சி செய்ய வேண்டும்.
ஒரு பொருளைப் பயன்படுத்திய பிறகு அது தேவையில்லை, அதனால் இது உபயோகப்படாது, இனி இதனால்
எந்த பயனும் இல்லை என்று தூக்கியெறியப்படும் பொருள்களே கழிவுகள் எனப்படும். ஒவ்வொருவரும்
உருவாக்கும் கழிவுகள் அனைத்தும் சூழ்நிலை மண்டலத்தைப் பாதிக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கும்
இந்தக் கழிவுகள் எங்கே போகிறது என்பது தெரிவதில்லை. கழிவுகளிலே பல வகையான கழிவுகள்
உள்ளன. திடக்கழிவுகள் (குப்பைத்தொட்டியிலுள்ள திரவக்கழிவுகள் (சாக்கடைக் கழிவுகள்),
கழிவுகள்), வாயுக் கழிவுகள் (தொழிற்சாலை மாசுபாடுகள்).