பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நீர் | 6th Science : Term 3 Unit 2 : Water

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர்

நீர்

புவியில் காணப்படும் உயிர்வாழ்வதற்குத் தேவையான அடிப்படைப் பொருள்களில் நீர் ஒரு முக்கியமான பொருளாகும். நீரானது உயிர்களின் பரிணாம வளர்ச்சியிலும் உயிர்கள் நிலை பெற்று வாழ்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அலகு 2

நீர்




 

கற்றல் நோக்கங்கள்

நீரின் மூலங்கள் மற்றும் பயன்பாட்டிற்குக் கிடைக்கக்கூடிய நீரினைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளுதல்

நீரின் இயைபு பற்றியும், நீர் சுழற்சி பற்றியும் புரிந்து கொள்ளுதல்

நீரினை சேமிக்கும் வழிகளைப் பரிந்துரைக்கும் திறன்களைப் பெறுதல்

புவியில் உயிர் வாழத் தேவையான நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுதல்

நீரை சேமிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல்.

 

அறிமுகம்

புவியில் காணப்படும் உயிர்வாழ்வதற்குத் தேவையான அடிப்படைப் பொருள்களில் நீர் ஒரு முக்கியமான பொருளாகும். நீரானது உயிர்களின் பரிணாம வளர்ச்சியிலும் உயிர்கள் நிலை பெற்று வாழ்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் இல்லாமல் இப்புவியில் உயிர் வாழ்வைப் பற்றி கற்பனை செய்துபார்ப்பது மிகவும் கடினமாகும். நீரானது நமது புவியின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், உயிரினங்களின் உடல் வெப்பநிலையினை சமமாகப் பேணுவதிலும் நீர் முக்கிய பங்காற்றுகிறது.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 2 : நீர்