நீர் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - புவியின் மொத்த நீரும் எங்கு காணப்படுகிறது? | 6th Science : Term 3 Unit 2 : Water
புவியின் மொத்த நீரும் எங்கு காணப்படுகிறது?
இயற்கையில் நீரானது மூன்று நிலைகளில் காணப்படுகிறது. அவை திண்மம்,
நீர்மம் மற்றும் வாயு நிலையாகும்.
திண்ம
நிலை (பனிக்கட்டி) இது உயரமான மலைகளிலும் பனிப்பாறைகளிலும் துருவப்பிரதேசங்களிலும்
பனிக்கட்டியாகவும் மூடுபனியாகவும் காணப்படுகிறது.
திரவ
நிலை (நீர்) பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும்
நிலத்தடியில் நீரானது திரவ நிலையில் காணப்படுகிறது.
வாயு
நிலை (நீராவி) நம்மைச் சுற்றி காணப்படும் காற்றில் நீராவி வாயுநிலையில்
காணப்படுகிறது.