Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | காற்றுப் போக்குப் படம்

புவியியல் - காற்றுப் போக்குப் படம் | 11th Geography : Chapter 10 : Representation of Relief Features and Climatic Data

11 வது புவியியல் : அலகு 10 : நிலத்தோற்றம் மற்றும் காலநிலை புள்ளி விவரங்களைக் காட்டும் முறைகள்

காற்றுப் போக்குப் படம்

காற்றுப் போக்குப்படமானது ஒரு குறிப்பிட்ட இடத்தின் காற்று பற்றிய புள்ளிவிவரத்தை காண்பிக்க வரையப்படுகிறது.

காற்றுப் போக்குப் படம்

காற்றுப் போக்குப்படமானது ஒரு குறிப்பிட்ட இடத்தின் காற்று பற்றிய புள்ளிவிவரத்தை காண்பிக்க வரையப்படுகிறது. இது நட்சத்திர வடிவத்தில் இருப்பதால் நட்சத்திர படம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வரைப்படம் ஒரு குறிப்பிட்ட இடத்தின் காற்றின் திசை மற்றும் சராசரி அடுக்கு நிகழ்வினையும் குறித்து அறிய வரையப்படுகிறது. தரைமட்டத்திலிருந்து 10மீட்டர் உயரத்தில் காற்றின் புள்ளிவிவரம் பொதுவாக சேகரிக்கப்படுகிறது.

தேவைப்படும் போது பிரத்யோக காரணங்களுக்காக பல்வேறு உயரத்தில் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படும். இப்படத்தை பிரதி மாதம், காலம் மற்றும் ஆண்டு எனத் தேவைக்கேற்ப வரையலாம். மேலும் காற்றின் வேகத்தையும் இப்படத்தின் மூலம் காண்பிக்கலாம். சில சமயங்களில் காற்றின் வெப்பத்தையும் குறிக்கும் வழக்கம் உள்ளது.

விமான நிலையத்தின் ஓடுபாதை அமைக்க காற்று போக்குப்படம் மிக அவசியமாகும். பொதுவாக நிரந்தர கோள்காற்று வீசும் திசையைப் பொறுத்தே ஓடு பாதை அமைக்கப்படும். விமான ஓட்டி விளக்கப்படத்திலும், மாலுமி விளக்கப்படத்திலும் அத்தியாவசிய உள் அடக்கப்படமாக காற்று போக்குப்படம் சேர்க்கப்படுகிறது. நல்ல காற்றோட்டம் அமையகட்டிட வல்லுநர்களும்கட்டிட அமைப்பாளர்களும் காற்று போக்குப்படத்தினை ஆய்வு செய்வது மிக அவசியமாகிறது. சாதாரண காற்று போக்குப்படத்தின் கருத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

தீர்வுகண்ட எடுத்துக்காட்டு

படிமுதலில் தகுந்த அலகினை தெறிவு செய்யவும் (இம்மாதிரியில் செ.மீ = 10 சதவீதம்)

படி 2 அலகினுக்கு தகுந்தார்போல் வட்டம் வரையவும் (இம்மாதிரியில் 0.4 செ.மீ ஆரத்திற்கு ஒரு வட்டம் வரையவும்.)

படி 3 பாகைமானியின் உதவியுடன் திசைகளைக் படத்திலுள்ளதைப் போல குறிக்கவும்.(0-வடக்கிற்கும், 45° வடகிழக்கு, 90 கிழக்கு 135° தென்கிழக்கு, 180° - தெற்கு, 225° - தென்மேற்கு, 270° மேற்கு 315°வடமேற்கு)



படி 4 பட்டை படம் வரைவது போல 2.7 செ.மீ வட திசையிலும், 0.9 செ.மீ வடகிழக்கிலும் கொடுக்கப்பட்ட அனைத்து திசைக்கும் தெறிவு செய்யப்பட்ட அளவைக்கு வரைந்த படத்தினை பூர்த்தி செய்யவும்.

படி 5 அமைதியான நாட்களின் சதவிகிதத்தை வட்டத்தின் நடுவில் குறிக்கவும். வரையப்படவேண்டிய படத்தின் அளவை மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளவாறு திசைகளைக் குறிக்கவும்.




மாணவர் செயல்பாடு


காற்றுப் போக்குப்படம் மற்றும் அதன் விவரணம் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திலிருந்து தெரிந்து கொள்ளவும். https://www.envitrans.com/how-tointerpret-a-wind-rose.php

 

பயிற்சி 5

கீழ்க்கண்ட நிலையங்களுக்கு காற்று விளக்கப்படம் வரைக.




11 வது புவியியல் : அலகு 10 : நிலத்தோற்றம் மற்றும் காலநிலை புள்ளி விவரங்களைக் காட்டும் முறைகள்