காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - சுதந்திர இந்தியாவில் பெண்கள் | 8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages
சுதந்திர
இந்தியாவில் பெண்கள்
இந்தியாவில்
பெண்கள் தற்போது கல்வி, அரசியல், மருத்துவம், கலாச்சாரம், சேவைத் துறைகள், அறிவியல்
மற்றும் தொழில்நுட்பம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கின்றனர்.
இந்திய
அரசியலமைப்பு (பிரிவு 14) சம வாய்ப்பு மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் என உத்திரவாதமளிக்கிறது.
பெண்களுக்கு
அதிகாரம் அளிப்பதற்கான தேசிய கொள்கையானது, தேசிய கல்விக் கொள்கை (1986) கீழ் நிறைவேற்றப்பட்டது.
புதிதாக தொடங்கப்பட்ட மஹிளா சமக்யா எனும் திட்டமானது பெண்களுக்கு அதிகாரமளிப்பதில்
முக்கிய கவனம் செலுத்துகிறது. பெண்களுக்கு 33 சதவீத இடத்தை ஒதுக்கியது பெண்களின் சமூக
- அரசியல் செல்வாக்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
