Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | விடுதலை இயக்கத்தில் பெண்கள்

காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - விடுதலை இயக்கத்தில் பெண்கள் | 8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

விடுதலை இயக்கத்தில் பெண்கள்

தொடக்ககால காலனிய எதிர்ப்பு போராட்டத்தில் பெண்கள் பல்வேறு வகைகளில் முக்கிய பங்காற்றினர். சிவகங்கையின் வேலுநாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக வீரதீரமாக போரிட்டு சிவகங்கையில் தனது ஆட்சியை மீட்டெடுத்தார்.

விடுதலை இயக்கத்தில் பெண்கள்

தொடக்ககால காலனிய எதிர்ப்பு போராட்டத்தில் பெண்கள் பல்வேறு வகைகளில் முக்கிய பங்காற்றினர். சிவகங்கையின் வேலுநாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக வீரதீரமாக போரிட்டு சிவகங்கையில் தனது ஆட்சியை மீட்டெடுத்தார். 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் பேகம் ஹஸ்ரத் மஹால், ஜான்சியின் ராணி லட்சுமி பாய் போன்றோர் ஆயுதமேந்தி போராடினர்.


விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அயல்நாட்டு பொருட்களை புறக்கணித்தல், ஊர்வலங்களில் கலந்துகொள்வது, சட்டங்களை மீறுதல் மூலம் தடியடி பெற்று சிறைக்குச் சென்றனர். விடுதலைப் போராட்டத்தில் அவர்களது பங்களிப்பு வெகுஜன தன்மையில் புதிய பரிணாமத்தைச் சேர்த்தது.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை