Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல்

பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல் | 4th Maths : Term 3 Unit 5 : Money

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல்

பணத்தை மதிப்பு வகைப்பாடு செய்து ரூபாய் மற்றும் பைசாவை (10 இன்மடங்கு) இன மாற்றத்துடன் கூட்டல் மற்றும் கழித்தல் (செங்குத்தாக)

பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல்

பணத்தை மதிப்பு வகைப்பாடு செய்து ரூபாய் மற்றும் பைசாவை (10 இன்மடங்கு) இன மாற்றத்துடன் கூட்டல் மற்றும் கழித்தல் (செங்குத்தாக)


மாற்றமில்லாமல் கூடுதல்

சங்கர் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பை ₹ 45.50, 78.60 இக்கு வாங்கினார். மொத்த விலையைக் காண்க.

சரியான முறை

1 கிகி அரிசியின் விலை = ₹ 45.50

1 கிகி பருப்பின் விலை  = ₹ 78.60

மொத்த விலை         124.10


மாற்றத்துடன் கூடுதல்

வியாபாரி ஒரு வேர்க்கடலை உருண்டையில் பல உட்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கிறார், உட்பொருட்களின் விலையையும் சேர்த்து உருண்டை விற்கிறார். உருண்டையின் அசல் விலை ₹ 20, உருண்டையில் உள்ள உட்பொருட்களின் விலை 0.75 பைசாக்கள். உருண்டையின் மொத்த விலையைக் காண்க.

சரியான முறை

உருண்டையின் அசல் விலை        = ₹ 20.00

உட்பொருட்களின் விலை      = ₹ 0.75

உருண்டையின் மொத்த விலை       ₹ 20.75



எடுத்துக்காட்டு

இருசன் மின்னணுக் கடைக்குச் சென்று, 100 வாட், 120 வாட், 150 வாட் பல்புகளை = ₹ 12.50, ₹ 14. 70, ₹ 18.50 இக்கு வாங்கினார். அவர் செலவழித்த தொகை எவ்வளவு?

100 வாட் பல்பின் விலை                       = ₹ 12.50

120 வாட் பல்பின் விலை                       = ₹ 14.70

150 வாட் பல்பின் விலை                       = ₹ 18.50

மொத்தம் செலவழித்த தொகை       = ₹ 45.70



முயற்சி செய்வோம்



4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்