Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | வானிலைக் கூறுகளை அளவிடுதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

வானிலை நிலவரைபடம் - புவியியல் - வானிலைக் கூறுகளை அளவிடுதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் | 11th Geography : Chapter 12 : Weather Maps

11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம்

வானிலைக் கூறுகளை அளவிடுதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

மழையின் அளவு, வகை, மற்றும் தீவிரத்தை கணக்கிட வானிலை ரேடார்கள் (Rador) பயன்படுத்தப்படுகின்றன.

வானிலைக் கூறுகளை அளவிடுதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

அண்மைக்காலத்தில் வானிலை மையங்கள் வானில் பறக்கும் பலூன்கள், வானூர்திகள், கப்பல்கள் ஆகியவற்றை மேற்கண்ட வானிலை மூலக்கூறுகளை அளக்கும் கருவிகளை வைத்து வளிமண்டல கீழடுக்கில் நிலவும் வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், ஈரப்பதம் ஆகியவை அளவிடப்படுகிறது. மழையின் அளவு, வகை, மற்றும் தீவிரத்தை கணக்கிட வானிலை ரேடார்கள் (Rador) பயன்படுத்தப்படுகின்றன.

ரேடியோ சோண்டு (Radiosonde) (இக்கருவி பலூன்களோடு இணைக்கப்பட்டு வளிமண்டலத்தில் ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் பல்வேறு அடுக்குகளில் நிலவும் தட்பவெப்ப நிலையைக் கணக்கிடும்) வளிமண்டலத்தில் நிலவும் வெப்பநிலை, பனிநிலை, மற்றும் காற்று ஆகியவற்றைக் கணக்கிடும் கருவியாகும். இது காற்றின் வேகத்தையும் திசையையும் ரேடார் உதவியுடன் கண்காணிக்கிறது.

இப்பயன்பாட்டில் தற்போது வானிலை செயற்கைக்கோள்கள் துல்லியமாக படம் பிடித்து வானிலை நிலவரங்களை தந்து உதவுகிறது. அவ்வாறு செயல்படும் செயற்கைக் கோள்களில் பின்வருவன முக்கியமான வைகளாகும். மெட்சாட் 1 அல்லது கல்பனா-1 (METSAT-1 or KALPANA-1), ஓஷியன்சாட் - 2 (OCEANSAT - 2) இன்சாட் - 3டி (INSAT - 3D) ஸ்காட்சாட் - 1 (SCATSAT - 1).

11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம்