Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | ஐரோப்பியர் வருகை

ஐரோப்பியரின் வருகை - ஐரோப்பியர் வருகை | 11th History : Chapter 16 : The Coming of the Europeans

11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை

ஐரோப்பியர் வருகை

நன்கு நிறுவப்பட்ட முறைப்படுத்தப்பட்ட இவ்வணிகத்திற்கு வெளியே இருந்து வந்த முதல் அதிர்ச்சி என்பது போர்த்துகீசியரிலிருந்து தொடங்கிய ஐரோப்பியரின் வருகையே ஆகும்.

ஐரோப்பியர் வருகை

நன்கு நிறுவப்பட்ட முறைப்படுத்தப்பட்ட இவ்வணிகத்திற்கு வெளியே இருந்து வந்த முதல் அதிர்ச்சி என்பது போர்த்துகீசியரிலிருந்து தொடங்கிய ஐரோப்பியரின் வருகையே ஆகும். ஐரோப்பாவிற்குத் தேவையான நறுமணப் பொருட்களை நேரடியாகப் பெறுவது என்பதே ஐரோப்பியரின் முதன்மை நோக்கமாக இருந்தது. பண்டைய நாட்களில் நறுமணப் பொருட்கள் கடல் வழியாகப் பாரசீக வளைகுடாவிலுள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நிலவழிப் பாதை மூலம் மத்திய தரைக்கடல் பகுதியைச் சென்றடையும். இருவருக்கிடையில் எளிமையான நேரடியான வணிகத்திற்கு ஆசியச் சந்தைகளில் வாய்ப்பில்லை என்பதை ஐரோப்பியர் விரைவிலேயே புரிந்துகொண்டனர். ஏனெனில் உள்ளூர்ப் பொருளாதாரங்களில் ஐரோப்பியப் பொருட்களுக்கான (தங்கம், வெள்ளி தவிர) தேவை இல்லை. ஆனால் மற்றொருபுறம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சந்தைகளில் இந்தியத் துணிகளுக்கு இருந்த உலகளாவிய தேவையால் இந்தியத் துணிகள் செலாவணி ஊடகமாயிற்று. இந்தோனேசியத் தீவுகளில் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த வண்ணம் பூசப்பட்ட துணிகளுக்கான தேவை டச்சுக்காரரையும் ஆங்கிலேயரையும் கிழக்குக் கடற்கரையில் தங்கள் நிறுவனங்களை அமைத்துக் கொள்ளச் செய்தது. அங்கிருந்துகொண்டு துணிகளைக் கொள்முதல் செய்து அவற்றை இலாபகரமான நறுமணப் பொருட்களுக்காகப் பண்டமாற்று செய்து கொண்டனர்.

11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை