Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 2 : Climate and Natural Vegetation of India

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக விடையளிக்கவும்.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. காலநிலையைப் பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிடுக.

அட்சங்கள்

பருவக்காற்று

கடல் மட்டத்திலிருந்து உயரம்

நிலத்தோற்றம்

கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு

ஜெட்காற்றுகள்

 

2. ‘வெப்ப குறைவு விகிதம்’ என்றால் என்ன?

புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர்  உயரத்திற்கும் 6.5° C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. இதற்கு 'வெப்பகுறைவு விகிதம்' என்று பெயர்.

 

3. ‘ஜெட் காற்றோட்டங்கள்’ என்றால் என்ன?

வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் “ஜெட் காற்றுகள்என்கிறோம்.

 

4. பருவக்காற்று குறித்து ஒரு குறிப்பு எழுதுக.

பருவங்களுக்கேற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக்கொண்டு வீசும் கோள் காற்றுகளைப் பருவக்காற்று என்கிறோம்.

 

5. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.

• குளிர்க்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி வரை.

• கோடைக்காலம்: மார்ச் முதல் மே வரை.

• தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழைக்காலம்: ஜூன் முதல் செப்டம்பர் வரை.

• வடகிழக்கு பருவக்காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை.

 

6. ‘பருவமழை வெடிப்பு' என்றால் என்ன?

• தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46° C வரை உயருகிறது.

• தென்மேற்கு பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) ‘பருவமழை வெடிப்பு' எனப்படுகிறது.

 

7. அதிக மழை பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.

•  மேற்கு கடற்கரை

•  நாகலாந்து

•  அசாம் மேகாலயாவின் தென்பகுதி

•  அருணாச்சலப்பிரதேசம்

•  திரிபுரா

போன்ற பகுதிகள் 200 செ. மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவையும் பெறுகின்றன.

 

8. இந்தியாவில் சதுப்புநிலக் காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.

• கங்கை - பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன

•  மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன.

 

9. இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.

• மன்னார் வளைகுடா

•  சுந்தரவனம்

 நந்தாதேவி

•  அகத்திய மலை

•  நீலகிரி

 

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்