Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவான விடை தருக.

இந்திய அரசியலமைப்பு | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடை தருக. | 10th Social Science : Civics : Chapter 1 : Indian Constitution

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு1 : இந்திய அரசியலமைப்பு

விரிவான விடை தருக.

V. விரிவான விடை தருக. VI. செயல்பாடுகள்.- புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சமூக அறிவியல் : குடிமையியல் : இந்திய அரசியலமைப்பு

V. விரிவான விடை தருக.

 

1. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

• உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.

• இதன் பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.

• இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

• இது கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது

• இந்தியாவை ஒரு சமயச்சார்பற்ற நாடாக்குகிறது

• சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.

• எந்தவித வேறுபாடுமின்றி 18-வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை வழங்குகிறது.

 

2. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III) பிரிவு 12-லிருந்து பிரிவு 35- வரையுள்ள பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிறது.

1. சமத்துவ உரிமை:

• பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

• பிரிவு 15 - மதம், இனம், சாதி, பால் அல்லது பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபாடு கிடையாது.

• பிரிவு 16 - பொது வேலைவாய்ப்புகளில் சமத்துவம்.

• பிரிவு 17 - தீண்டாமையை ஒழித்தல்.

• பிரிவு 18 - இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்.

2. சுதந்திர உரிமை:

• பிரிவு 19 - பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள், அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.

• பிரிவு 20 - குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை

• பிரிவு 21 - வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.

• பிரிவு 21A - தொடக்கக்கல்வி பெறும் உரிமை.

• பிரிவு 22 - சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.

3. சுரண்டலுக்கெதிரான உரிமை:

• பிரிவு 23 - கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபரத்தை தடுத்தல்.

• பிரிவு 24 - தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.

4. சமயச் சார்பு உரிமை:

• பிரிவு 25 - எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.

• பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.

• பிரிவு 27 - எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.

• பிரிவு 28 - மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமலிருக்க உரிமை.

5. கல்வி, கலாச்சார உரிமை:

• பிரிவு 29 - சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.

• பிரிவு 30 - சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.

6. அரசியலமைப்பு சட்ட முறையீட்டு உரிமைகள்:

• பிரிவு 32 - தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையை பெறுதல்.

 

3. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக.

• நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.

• சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்யும் ஆணையாகும்.

• உச்சநீதிமன்றம் உயர்நீதி மன்றங்கள் ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வெளியிடுகின்றன.

) ஆட்கொணர் நீதிப்பேராணை:

சட்டத்திற்கு புறம்பாக மக்கள் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.

) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை:

மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனு தொடர்பான பணியினைச்   சம்பந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

) தடையுறுத்தும் நீதிப்பேராணை:

ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.

) ஆவணக் கேட்பு நீதிப்பேராணை:

உயர்நீதி மன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலணைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.

) உரிமை வினவு நீதிப்பேராணை:

இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில், அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.

 

4. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.


அடிப்படை உரிமைகள்

1. இவை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது.

2. அரசாங்கத்தால் கூட இந்த உரிமையை சுருக்கவோ நீக்கவோ முடியாது.

3. இவற்றை நீதிமன்ற சட்டத்தால் செயற்படுத்த முடியும்.

4. இவை சட்ட ஒப்புதலைப் பெற்றவை.

5. இந்த உரிமைகள் நாட்டின் அரசியல் ஜனநாயத்தை வலுப்படுத்துகிறது.

அரசு கொள்கைக்கான வழிகாட்டும் நெறிமுறைகள்

1. இவை அயர்லாந்து நாட்டின் அரசிலமைப்பிலிருந்து பெறப்பட்டது.

2. இவை அரசுக்கு வெறும் அறிவுறுத்தல்களே ஆகும்.

3. எந்த நீதிமன்றத்தாலும் கட்டாயப்படுத்த முடியாது.

4. இவை தார்மீக மற்றும் அரசியல் ஒப்புதலைப் பெற்றவை.

5. இந்த கொள்கைகளை செயற்படுத்தும் பொழுது, சமுதாய மற்றும் பொருளாதார ஜனநாயகம் உறுதியாகிறது.


VIசெயல்பாடுகள்.


இந்த அஞ்சல் வில்லைகள் எந்த அடிப்படை உரிமைகள் மீறுதலைக் குறிப்பிடுகின்றன?

பக்கம்: 256

சுரண்டெலுக்கெதிரான உரிமை

பிரிவு 23, 24-ன் படி, கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையை சுட்டிக்காட்டுகிறது.

 

 

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு1 : இந்திய அரசியலமைப்பு