Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography : Lithosphere – I Endogenetic Processes

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் : பயிற்சிகள் : l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக புத்தக வினாக்கள் V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

IV. சுருக்கமான விடையளி

1. புவியின் நான்கு கோளங்களைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

விடை:  

புவியின் நான்கு கோளங்கள் :

புவியில் பாறையாலான திடமான மேற்பரப்பு பாறைக் கோளம் ஆகும்.

புவியில் நீரினால் சூழப்பட்ட பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீராவி சூழ்ந்த நீர்ப்பகுதி நீர்க்கோளம் ஆகும்.

புவியைச் சூழ்ந்த காற்றால் ஆன அடுக்கு வாயுக்கோளம் ஆகும்.

உயிரினங்கள் வாழும் அடுக்கு உயிர்க்கோளம் ஆகும்.

 

2. புவியின் உள் அடுக்குகள் யாவை?

விடை:  

புவியின் உள் அடுக்குகள் :

மேலோடு 

கவசம்

கருவம்

 

3. புவித்தட்டுகள் - வரையறு

விடை:

புவித்தட்டுகள்

 • பாறைக்கோளத்தின் புவித்தட்டுகள் முதன்மை புவித்தட்டுகள் மற்றும் சிறிய புவித்தட்டுகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.

கவசத்தில் காணப்படும் வெப்ப சக்தி புவித்தட்டுகள் நகர்வதற்கு காரணம். புவித்தட்டுகள் மோதுவதால் மலைத்தொடர்கள் மற்றும் ஒழங்கற்ற நிலத்தோற்றங்கள் உருவாகின்றன.

 

4. ஆழிப்பேரலைகள் (Tsunami) என்றால் என்ன?

விடை:

கடலடியில் தோன்றும் புவி அதிர்ச்சி, எரிமலைச் செயல்பாடு, கடலோர நிலச் சரிவுகள் காரணமாக கடலில் பெரிய அலைகள் உருவாகின்றன. இப்பேரலைகள் ஆழிப்பேரலைகள் அல்லது கடற்கோள் எனப்படுகின்றன. (சுனாமி என்பது இவ்வலைகளைக் குறிக்கும் ஜப்பானிய சொல்)

ஆழிப்பேரலைகளின் சராசரி வேகம் மணிக்கு 500 கி.மீ. நீளம் 600 கி.மீ., உயரம் 15 மீட்டர்.

 

5. எரிமலை என்றால் என்ன? அவற்றின் கூறுகள் யாவை?

விடை:

எரிமலை :

புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே எரிமலை வெடிப்பு எனப்படும்.

மேற்பரப்பில் வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு லாவா எனப்படும்.

எரிமலைக் கூறுகள் :

பாறைக்குழம்பு தேக்கம்

துவாரங்கள்

எரிமலைக்கூம்புகள்

எரிமலை வாய்

 

6. புவி அதிர்ச்சி என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?

விடை:

புவி அதிர்ச்சி :

புவி அதிர்ச்சி என்பது புவி ஓட்டில் திடீரென ஏற்படும் அதிர்வைக் குறிக்கின்றது.

புவிக்குள் புவி அதிர்வு உருவாகும் புள்ளி புவி அதிர்ச்சிகீழ் மையம்' எனப்படும்.

புவி அதிர்ச்சி கீழ்மையத்தின் நேர்உயரே புவி மேற்பரப்பில் புவி அதிர்ச்சிமேல் மையம்' அமைந்துள்ளது.

புவி அதிர்ச்சி கீழ்மையத்திலிருந்து அதன் தாக்கம் புவியின் மேல் மையத்தில் தான் அதிகமாகக் காணப்படும்.

 

7. புவி அதிர்வலைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

விடை:

புவி அதிர்வலைகள் :

புவி அதிர்ச்சி உருவாக்கும் அதிர்வலைகள் புவி அதிர்வலைகள்' எனப்படும். ஊடுருவிச்செல்லும் பாதையைப் பொறுத்து இவ்வதிர்வலைகளின் தன்மை, விசை மற்றும் வேகம் மாறுபடும்.

 வகைகள் :

முதன்மை அலைகள் () ‘P' அலைகள்

இரண்டாம் நிலை அலைகள் () 'S' அலைகள்

மேற்பரப்பு அலைகள் () 'L' அலைகள்

 

8. பசிபிக் நெருப்பு வளையம் பற்றி குறிப்பு எழுதுக.

விடை:

பசிபிக் நெருப்பு வளையம் என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஒரு வில் ஆகும். அங்கு பல எரிமலைகள் மற்றும் பூகம்பங்கள் உருவாகின்றன.

இப்பகுதி பசிபிக் ரிம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பசிபிக் சுற்றியுள்ள நாடுகளின் கடலோர பகுதிகளை குறிக்கிறது.

உலகின் செயலற்ற எரிமலைகள் மற்றும் செயலில் எரிமலைகளில் முக்கால்வாசி இங்கு உள்ளன.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்