இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு | பொருளியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Economics : Employment in India and Tamil Nadu

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி


1. விவரி

) முதன்மைத் துறை

) இரண்டாம் துறை,

) சார்புத் துறை

விடை:

) முதன்மைத்துறை:

விவசாயம், காடுகள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் பண்ணை, மீன் வளர்ப்பு போன்றவை இதில் அடங்கும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழுவின் பெரும்பகுதி முதன்மைத் துறையில் ஈடுபட்டுள்ளது.

முதன்மைத்துறை விவசாயத்துறை என்றும் அழைக்கப்படுகிறது.

) இரண்டாம் துறை:

உற்பத்தி, சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள், கட்டுமானம் போன்றவை இதில் அடங்கும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழுவின் சிறுபகுதியினரே இரண்டாம் துறைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வளர்ந்த நாடுகளில் இரண்டாம் துறை ஊழியர்கள் அதிக அளவில் இருப்பர்.

) சார்புத்துறை:

போக்குவரத்து, காப்பீடு, வங்கி, வணிகம், தொலைத் தொடர்பு, வீட்டுமனை விற்பனை அரசு மற்றும் அரசு சாரா சேவைகள் இதில் அடங்கும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைவான அளவினரே சார்புத் துறையில் ஈடுபட்டுள்ளனர். வளர்ந்த நாடுகளில் அதிக அளவில் இருப்பர். இத்துறை சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது.

 

2. இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பைப் பற்றி விளக்குக.

விடை:

இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மையானது பல பரிமாணங்களைக் கொண்டது. சிலருக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு ஓராண்டில் சில மாதங்களுக்கே வேலை கிடைக்கும்.

வேலையமைப்பை முதன்மைத்துறை அல்லது விவசாயத் துறை, இரண்டாம் துறை அல்லது தொழில் துறை, மூன்றாம் துறை அல்லது சார்புத்துறை அல்லது சேவைத்துறை என மூன்றாக வகைப்படுத்தலாம்

முதன்மைத்துறை :

விவசாயம், காடுகள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் பண்ணை ,மீன் வளர்ப்பு போன்றவை

இரண்டாம்துறை : உற்பத்தி, சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள், கட்டுமானம் போன்றவை

சார்புத்துறை : போக்குவரத்து, காப்பீடு, வங்கி, வணிகம், தொலைத் தொடர்பு, வீட்டுமனை விற்பனை, அரசு மற்றும் அரசு சாரா சேவைகள்

• 1972-73 ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு பத்தாண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு வளர்ச்சி சராசரியாக 2% அளவுக்கு உயர்ந்துள்ளது.

 

3. ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் நிலவுகின்ற வேலை வாய்ப்பை ஒப்பிடுக

விடை:

ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள்:

1. பதிவு செய்யப்பட்டதும் அரசாங்க விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றும் ஊழியர்களைக் கொண்டது

2. வங்கிகள், ரயில்வே, காப்பீடு, உற்பத்தித் தொழிற்சாலைகள், அரசு ஊழியர்கள் இதில் அடங்குவர்

3 பணிப் பாதுகாப்பு உண்டு

4. அதிக ஊதியம் பெறுவர்

5. நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மருத்துவ உதவித் தொகை, காப்பீடு போன்றவை வழங்கப்படும்.

ஒழுங்கமைக்கப்படாத துறைகள் :

1.  விதிகளும், ஒழுங்குமுறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றப்படுவதில்லை

2. சிறு மற்றும் குடிசைத் தொழில் செய்வோர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் செய்வோர் அடங்குவர்.

3. பணிப்பாதுகாப்பு இல்லை

4. குறைந்த ஊதியம் பெறுவர்

5. ஊதியத்துடன் கூடிய விடுப்பு, விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு கிடையாது.

 

4. பொதுத் துறையையும் தனியார் துறையையும் வேறுபடுத்துக.

விடை:

பொதுத்துறை:

1. சேவை நோக்கம் கொண்டது

2 சொத்துக்கள் அரசாங்கத்துக்குச் சொந்தம்.

3. ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.

4. நாட்டு வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன

5. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத. தொலைபேசி நிறுவனம்.

தனியார் துறை:

1. இலாப நோக்கம் கொண்டது.

2. சொத்துக்கள் தனி நபர்களுக்குச் சொந்தம்.

3. ஊதியம் உரிமையாளரால் வழங்கப்படுகின்றன.

4. காடுகள், சுரங்கங்கள் போன்ற இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. 5. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், அசோக்  லேலண்ட், டாடா இரும்பு எஃகுத் தொழிற்சாலை

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு