Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography: Biosphere

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. சுருக்கமான விடையளி.


1. உயிர்க்கோளம் என்றால் என்ன?

விடை:

உயிர்க்கோளம், பாறைக் கோளம், நீர்க் கோளம், வளிக்கோளத்தை உள்ளடக்கிய புவியின் நான்காவது கோளமாகும்.

கடல் மட்டத்திலிருந்து வளிமண்டல கீழடுக்கில் சுமார் 20 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள இக்கோளம் தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.

 

2. சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?

விடை:

பல்வேறு உயிரினங்களின் தொகுதிசூழ்நிலை மண்டலம்' ஆகும். இம்மண்டலத்தில் வாழ்கின்ற, உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, உயிரற்ற சுற்றுச் சூழல் காரணிகளோடும் தொடர்பு கொள்கின்றன.

சூழ்நிலை மண்டலம் மிகச் சிறிய அலகிலிருந்து (.கா. மரப்பட்டை) உலகளாவிய சூழ்நிலை மண்டலம் (அல்லது) சூழல் கோளம் வரை (.கா. விவசாய நிலம், வனச்சூழல் அமைப்பு) வேறுபட்டுக் காணப்படுகிறது.

 

3. உயிரினப் பன்மை என்றால் என்ன?

விடை:

ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பதுஉயிரினப் பன்மை' ஆகும்.

.கா. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற நுண்ணியிரிகள்.

 

4. "உயிரினப் பன்மை இழப்பு" என்பதன் பொருள் கூறுக?

விடை:

மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்புஉயிரினப் பன்மையின் இழப்பு' எனப்படும்.

 

5. பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.

விடை:

நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகள்.

வெப்ப மண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி.

வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி

பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி

மித வெப்பமண்டலப் பல்லுயிர்த் தொகுதி.

தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்