Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography: Biosphere

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்

கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

IV. சுருக்கமான விடையளி.


1. உயிர்க்கோளம் என்றால் என்ன?

விடை:

• உயிர்க்கோளம், பாறைக் கோளம், நீர்க் கோளம், வளிக்கோளத்தை உள்ளடக்கிய புவியின் நான்காவது கோளமாகும்.

• கடல் மட்டத்திலிருந்து வளிமண்டல கீழடுக்கில் சுமார் 20 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள இக்கோளம் தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.

 

2. சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?

விடை:

• பல்வேறு உயிரினங்களின் தொகுதி ‘சூழ்நிலை மண்டலம்' ஆகும். இம்மண்டலத்தில் வாழ்கின்ற, உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, உயிரற்ற சுற்றுச் சூழல் காரணிகளோடும் தொடர்பு கொள்கின்றன.

• சூழ்நிலை மண்டலம் மிகச் சிறிய அலகிலிருந்து (எ.கா. மரப்பட்டை) உலகளாவிய சூழ்நிலை மண்டலம் (அல்லது) சூழல் கோளம் வரை (எ.கா. விவசாய நிலம், வனச்சூழல் அமைப்பு) வேறுபட்டுக் காணப்படுகிறது.

 

3. உயிரினப் பன்மை என்றால் என்ன?

விடை:

• ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பது ‘உயிரினப் பன்மை' ஆகும்.

எ.கா. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற நுண்ணியிரிகள்.

 

4. "உயிரினப் பன்மை இழப்பு" என்பதன் பொருள் கூறுக?

விடை:

• மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு ‘உயிரினப் பன்மையின் இழப்பு' எனப்படும்.

 

5. பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.

விடை:

நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகள்.

• வெப்ப மண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி.

• வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி

• பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி

• மித வெப்பமண்டலப் பல்லுயிர்த் தொகுதி.

• தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : உயிர்க்கோளம்