Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

திசுக்களின் அமைப்பு | உயிரியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Biology : Organisation of Tissues

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 18 : திசுக்களின் அமைப்பு

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 18 : திசுக்களின் அமைப்பு : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

V. சுருக்கமாக விடையளி

1. இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை? எவ்வாறு அவை மற்ற ஆக்குத் திசுக்களிலிருந்து வேறுபடுகின்றன?

விடை :

விளக்கம் : முதல் நிலை ஆக்குத் திசுவின் ஒரு பகுதி பிரிந்து நிலையான திசுப்பகுதிகளுக்கிடையே இவை காணப்படுகின்றன. இடையில் காணப்படுவதால் இடை ஆக்குத்திசு எனப்படுகிறது.

இருப்பிடம் :

1. இலையடி - (.கா) பைனஸ் தாவரம்

2. கணுவிடைப் பகுதியின் அடி (.கா) புற்கள்

 

2. கூட்டுதிசு என்றால் என்ன?  பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.

விடை :

வரையறை:

ஒன்றுக்கும் மேற்பட்ட பலவகை செல்கள் - ஒன்றாக தொகுப்பாக ஒரு பணியைச் செய்கின்றன.

வகைகள் :

இருவகைப்படும்

i) சைலம் - (நீரைக் கடத்தும் திசு)

ii) புளோயம் - (உணவைக் கடத்தும் திசு)

 i.) சைலம் கூறுகள் :

1) சைலம் டிரக்கீடுகள்

2) சைலம் நார்கள்

3) சைலம் குழாய்கள்

4) சைலம் பாரன்கைமா

ii) புளோயும் கூறுகள் :

1) சல்லடைக்குழாய்

2) துணைசெல்கள்

3) புளோயம் பாரன்கைமா

4) புளோயம் நார்கள்

 

3. அதிக அளவு நமது உடலில் காணப்படும் தசை திசுக்களைக் குறிப்பிடுக. அவற்றின் செயல்பாட்டினை வகுத்துரை.

விடை :

1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை),

2. மென்தசை (வரியற்ற தசை)

1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை) :

நம் உடலில் அதிகம் காணப்படுகிறது. இவை எலும்புடன் ஒட்டி உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளதால் எலும்புச் சட்டகத்தசை எனப்படுகிறது.

இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால். இவை இயக்க (தன்னிச்சை) தசைகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவைகளில் இருண்ட மற்றும் இருளற்ற பட்டைகள் மாறி மாறி காணப்படுவதால் இவை வரித்தசைகள் எனப்படுகிறது.

.கா. கை, கால்களில் காணப்படும் மூட்டுத் தசைகள்

2. மென்தசை (வரியற்ற தசை) :

இத்தசைகள் கதிர் வடிவில் உள்ளது. மையப்பகுதி அகன்றும் முனைப் பகுதி சுருங்கியும் உள்ளது.

இத்தசைகளில் கோடுகள் மற்றும் வரிகள் கிடையாது.

இவை நம் இச்சைகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை. எனவே இவை இயங்கு தசைகள் என அழைக்கப்படுகிறது.

.கா. இரத்த நாளம், இரப்பை , சுரப்பிகள், சிறுநீர்ப்பை

 

4. எலும்பு இணைப்புத்திசு என்றால் என்ன? எப்படி அவை நமது உடல் செல்கள் செயல்பட உதவுகின்றன?

விடை :

எலும்புத் திசு :

இது திடமான விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்பு சட்டக இணைப்புத் திசு.

செயல்பாடுகள் :

உடலுக்கு வடிவத்தையும், கட்டமைப்பையும் கொடுக்கிறது.

மென்மையான திசுக்களுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது.

 

5. பாலினப் பெருக்கத்தின் போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?

விடை :

பாலினப் பெருக்கம் செய்யும் உயிரினங்களில் இருமய நிலை (டிப்ளாய்டு) செல்கள் காணப்படுகிறது.

 • கேமீட்டுகள் உருவாக்கம் மைட்டாசிஸ் முறையில் நடைபெற்றால், குரோமோசோம் எண்ணிக்கை இரட்டிப்படையும் - அப்போது அந்த உயிரினம் அசாதாரணமானதாகக் காணப்பட வாய்ப்புள்ளது.

குன்றல்பகுப்பு (மியாசிஸ்) முக்கியத்துவம்:

குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) போது குரோமோசோம் எண் சரி பாதியாக குறைக்கப்படுகிறது. (n)

கருவுறும் போது, ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைந்து டிப்ளாய்டு (2n) (இருமைய) நிலையைப் பெறுகிறது.

இவ்வாறு குரோமோசோம் எண்ணிக்கையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

 

6. மைட்டாசிஸின் எந்த நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையப்பகுதியில் அமைகின்றன? எப்படி?

விடை :

மெட்டா நிலை.

குரோமோசோமில் உள்ள சென்டிரோமியர்கள் ஸ்பிண்டில் இழைகளால் இணைக்கப்பட்டிருப்பதால், குரோமோசோம் செல்லின் மையத்தில் உள்ளது.

 

VI. விரிவாக விடையளி

1. நிலைத்த திசுக்கள் யாவை? வெவ்வேறு வகையான எளிய நிலைத்த திசுக்களை விவரிக்க.

விடை :

வரையறை :

நிலைத்த திசுக்கள், பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ () தற்காலிகமாகவோ இழந்த திசுக்கள். இவை இருவகைப்படும்

1. எளியத்திசு,

2. கூட்டுத்திசு

1. எளியத்திசு:

ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆன திசு, இவை மூன்று வகைப்படும்.

) பாரன்கைமா,

) கோலன்கைமா,

) ஸ்கிளீரன்கைமா

) பாரன்கைமா:

சம அளவுடைய, மெல்லிய சுவருடைய முட்டை () பலகோண அமைப்புடைய செல்

இடைவெளிகளுடன் கூடிய திசுவாகும்.

(i) ஏரன்கைமா,

(ii) குளோரன்கைமா

(i) ஏரன்கைமா:

நீர்வாழ் தாவரங்களில் பாரன்கைமா காற்றிடைப் பகுதிகளைக் கொண்டுள்ளதால் - ஏரன்கைமா எனப்படும்.

(ii) குளோரன்கைமா :

பாரன்கைமா திசு மீது ஒளிபடும்போது - பசுங்கணிகங்களை உற்பத்தி செய்து - குளோரன்கைமாவாக மாறும்.

பணி :

1) நீர், உணவைச் சேமித்தல்

2) உறிஞ்சுதல், சுரத்தல்

3) மிதத்தல் etc,.


) கோலன்கைமா :

நீண்ட சதுர அல்லது சிறுத்த முனையுடைய உயிருள்ள செல்கள்.

சீரற்ற தடித்த லிக்னின் இல்லாத செல்சுவர் கொண்டது.

பணி :

புறத்தோலுக்கடியில் காணப்படுகிறது. தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.

) ஸ்கிளீரன்கைமா :

லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை கொண்டது.

முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாசம் அற்று காணப்படுகிறது.

இருவகைப்படும்.

1. நார்கள்,

2. ஸ்கீளிரைடுகள்


1) நார்கள்:

நீண்ட ஸ்கிளீரன்கைமா செல்களால் ஆனது. செல்சுவர் லிக்னின் பொருளால் ஆனது.

•  1-3 மிமீ சில தாவரங்களில் 20 மிமீ முதல் 550 மிமீ வரை நீளமுடையவை.

•  கன்னாபினஸ் சட்டைவா (சணல்)

•  கார்கோரஸ் காப்சுலரிஸ் (ஜீட் வகை) சணல்

•  லின்னம் யுசிட்டாஸ்ஸிமம் (ஆளி)

பணி :

வலுதரும் திசு - .கா. சைலம் நார்கள்

2) ஸ்கிளீரைடுகள்

இது அகன்று ஒற்றையாகவோ () தொகுப்பாகக் காணப்படும்.

இதன் செல்சுவர் லிக்னின் என்னும் பொருளால் ஆனது

குழிகள் நிலைத்த தோற்றத்துடன் காணப்படுகின்றது.

பணி:

பழங்கள் மற்றும் விதைகளின் உறைகளில் காணப்படுகிறது. வலுதரும் திசுவாகும். .கா. - பட்டாணி விதையுறை

 

2. சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.

விடை :

சைலம் :

நீரைக் கடத்தும் திசு - தாவர உடலுக்கு இயந்திர உதவியை அளிக்கிறது.

கூறுகள்

இவற்றின் கூறுகள் :

1. சைலம் டிரக்கீடுகள்,

2. சைலம் வெஸல்கள் (குழாய்கள்),

3. சைலம் நார்கள்,

4. சைலம் பாரன்கைமா

சைலம் டிரக்கீடுகள் :

•  நீண்ட அல்லது குழாய் போன்றவை.

தடித்த மற்றும்லிக்னின்' சுவரைக் கொண்ட இறந்த செல்களாகும்.

செல்களின் முனைப்பகுதி - மழுங்கியது. சிறுத்த () உளி போன்ற அமைப்புடையது.

பலவகை இரண்டாம் நிலைத் தடிப்புகளைக் கொண்டுள்ளது.

சைலம் நார்கள்:

நீண்ட செல்கள் - முனைகள் கூரானவை.

நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலக்குழாய்கள்

நீண்ட குழாய் வடிவம் - அகன்றது நீள் அச்சுக்கு இணையானது

செல்சுவர் - லிக்னின் காணப்படும் - அகன்ற மையக் குழிகளைக் கொண்டுள்ளது - இறந்தவை

நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலம் - பாரன்கைமா

செல்கள் மெல்லிய சுவரை உடையவை - உயிருள்ளவை

பணி - கடத்துதலில் உதவுவதோடு, ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளைச் சேகரிக்கிறது.


 

3. மைட்டாஸிஸ் மற்றும் மியாசிஸ்க்கு இடையேயுள்ள வேறுபாட்டினை பட்டியலிடுக.

விடை :

மைட்டாசிஸ்:

1. உடல் செல்களில் நிகழ்கிறது.

2. வாழ்க்கை முழுவதும் வளர்ச்சியைத் தொடர பங்காற்றுகிறது.

3. ஒரு பகுப்பை மட்டும் கொண்டது

4. இரு இருமய சேய் செல்கள் தோன்றுகின்றன.

5. தாய் செல்களில் குரோமோசோம் எண்ணிக்கை உள்ளது போலவே சேய்

செல்களிலும் ஒத்துக் காணப்படுகிறது. (2n) .

6. ஒத்த சேய் செல்கள் உருவாகின்றன.

மியாசிஸ்:

1. இனச் செல்களில் நிகழ்கிறது.

2. குறிப்பிட்ட வயதில் இனச்செயல்பாடு மற்றும் கேமிட்  உருவாக்கத்தில் பங்காற்றுகிறது..

3. இருபகுப்புகளைக் கொண்டது.

4. நான்கு ஒருமய சேய் செல்கள் தோன்றுகிறது.

5. தாய் செல்களில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கையிலிருந்து பாதி அளவு சேய் செல்களில் குறைந்து காணப்படுகிறது.

6. சேய் செல்கள் தாய் செல்களைப் போல் ஒத்திருப்பதில்லை மற்றும் பரவலாக வகைப் படுத்தப்பட்டுள்ளன.

 

VII. மதிப்பு அடிப்படை கேள்விகள்

1. இரத்தத்திலிருந்து அனைத்து இரத்தத்தட்டுகளையும் நீக்கும் போது என்ன விளைவு ஏற்படும்?

விடை :

இரத்த தட்டுகளின் முக்கிய பணி காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு ஏற்படுத்தி இரத்த இழப்பை தடுத்தல்.

இரத்தத்திலிருந்து இரத்தத் தட்டுகளை நீக்கிவிட்டால் காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு நிகழாது. மாறாக, இரத்த இழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடும்.

 

2. இரத்தத்தில் எவை உண்மையான செல்கள் இல்லை? ஏன்?

விடை :

இரத்தத்தில் RBC, WBC, இரத்த தட்டுகள் காணப்பட்டாலும், RBC, மற்றும் இரத்தத்தட்டுகள் இவற்றில் உட்கருக்கள் இல்லை எனவே இவை உண்மையான செல்களாகக் கருதப்படவில்லை.

• WBC மட்டுமே இரத்தத்தில் காணப்படும் உண்மையான செல்கள் ஆகும்.


பிற நூல்கள்

1. B.P.Pandey -Plant Anatomy, S.Chand and Company Ltd, New Delhi

2. P.S.Verma and V.K.Agarwal-Cytology, S.Chand and Company Ltd, New Delhi

3. D.G.Mackean and Dave Hayward-Biology, Cambrige IGCSE, Oxford University Press, New York

 

இணைய வளங்கள் 

https://www.britannica.com/science 

https://biologydictionary.net

 

கருத்து வரைபடம்


 

இணையச்செயல்பாடு

திசுக்கள் மற்றும் உறுப்புகள்

படி 1. கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்திச் செயல்பாட்டின் இணையப் பக்கத்திற்குச் செல்க. "Adobe Flash Player " இயங்குவதற்கு அனுமதிக்கவும்.

படி 2. குறிப்பிட்ட உறுப்பில் உள்ள திசுக்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு, பட்டியலில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஓர் உறுப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3. ஓர் உறுப்பின், குறிப்பிட்ட திசுவே நமது தேவையெனில், "Use this" என்கிறவிருப்பத்தேர்வின் மூலம் தொடர்ச்சியாக அத்திசுக்களைத் தெரிவு செய்து கொள்ளவும்.

படி 4. அவ்வாறு திசுக்களைத் தேர்ந்தெடுத்தப் பின்னர், ஓர் "Happy withthis choice" என்கிற ஒரு குறிப்பு குறும்பெட்டி (Pop-Up message) திரையில் தோன்றும். அதனைச் சொடுக்குவதன் மூலம், உங்களுடைய தெரிவு சரியா என்பதை அறிந்து கொள்ளலாம். மீண்டும் முயலலாம். இவ்வகையில் பல்வேறு உறுப்புகளையும் கட்டமைக்கலாம்.

உரலி: https://www.centreofthecell.org/learn-play/gmaes/build-an-organ/ 

 

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 18 : திசுக்களின் அமைப்பு