Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | அறுசுவை அறிவோம்

பருவம் 2 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ் - அறுசுவை அறிவோம் | 1st Tamil : Term 2 Chapter 5 : Aru suvai arivom

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : அறுசுவை அறிவோம்

அறுசுவை அறிவோம்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : அறுசுவை அறிவோம்

இயல் 5

அறுசுவை அறிவோம்


 

அச்சுவெல்லம் தின்று பார்த்து

இனிப்புச் சுவையைக் கண்டுபிடி

 

வேப்ப இலையை மென்று பார்த்து

கசப்புச் சுவையைக் கண்டுபிடி

 

புளிங்காயில் நிறைஞ்சு கிடக்கும்

'புளிப்புச் சுவையைக் கண்டுபிடி

 

மிளகாயைக் கடிச்சுப் பார்த்து

காரப்புச் சுவையைக் கண்டுபிடி

 

உப்பை தொட்டு நாவில் வைத்து

உவர்ப்புச் சுவையைக் கண்டுபிடி

 

வாழைப்பூவை மென்று நீயும்

துவர்ப்புச் சுவையைக் கண்டுபிடி

 

சுவைகள்

இனிப்பு

புளிப்பு

கசப்பு

துவர்ப்பு

உவர்ப்பு

கார்ப்பு


 

எந்த 'பு' என்ன சுவை?


 

ஒன்றாகச் சேர்ந்தால்...


 

எந்திர எறும்பு


கதை கதையாம்

கதையைக் கேட்போம்: பெயரை எழுதுவோம்


1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : அறுசுவை அறிவோம்