Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | வானியல் தொலைநோக்கி (Astronomical telescope)

ஒளியியல் கருவிகள் - வானியல் தொலைநோக்கி (Astronomical telescope) | 12th Physics : UNIT 7 : Wave Optics

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்

வானியல் தொலைநோக்கி (Astronomical telescope)

விண்மீன்கள், கோள்கள், நிலவு போன்ற தொலைவிலுள்ள வான்பொருள்களை உருப்பெருக்கம் செய்து காண்பதற்குப் பயன்படும் தொலைநோக்கியே வானியல் தொலை நோக்கியாகும்.

வானியல் தொலைநோக்கி (Astronomical telescope)

விண்மீன்கள், கோள்கள், நிலவு போன்ற தொலைவிலுள்ள வான்பொருள்களை உருப்பெருக்கம் செய்து காண்பதற்குப் பயன்படும் தொலைநோக்கியே வானியல் தொலை நோக்கியாகும். வானியியல் தொலைநோக்கியில் தோன்றும் பிம்பம் தலைகீழானதாகும். கண்ணருகு லென்சைவிட அதிக குவியத் தூரமும் பெரிய துளையும் கொண்ட பொருளருகு லென்ஸ் இதில் உள்ளது. இது படம் 6.87 இல் காட்டப்பட்டுள்ளது. மிகத் தொலைவிலுள்ள பொருளிலிருந்து வரும் ஒளி, பொருளருகு லென்சின் வழியே நுழைந்து வானியல் தொலைநோக்கிக்குழலின் இரண்டாம் குவியப்புள்ளியில் ஒரு மெய் பிம்பத்தைத் தோற்றுவிக்கும். கண்ணருகு லென்ஸ், இந்த பிம்பத்தை உருப்பெருக்கம் செய்து, பெரிதான தலைகீழான இறுதி பிம்பத்தைத் தோற்றுவிக்கும்.



படம் 6.87 வானியல் தொலை நோக்கி

1. வானியல் தொலைநோக்கியின் உருப்பெருக்கம்

இறுதி பிம்பம் விழியுடன் ஏற்படுத்தும் கோணத்திற்கும் β பொருள் லென்ஸ் அல்லது விழியுடன் ஏற்படுத்தும் கோணத்திற்கும் a உள்ள விகிதமே வானியல் தொலைநோக்கியின் உருப்பெருக்கம் (m) ஆகும்.


வானியல் தொலைநோக்கியின் தோராய நீளம், L= f0 +fe

 

எடுத்துக்காட்டு 6.43

ஒரு சிறிய தொலைநோக்கி ஒன்றின் பொருளருகு லென்ஸ் மற்றும் கண்ணருகு லென்ஸ்களின் குவியத்தூரங்கள் முறையே 125 cm மற்றும் 2 cm ஆகும். இந்தத் தொலை நோக்கியின் உருப்பெருக்கத்தைக் கணக்கிடுக. மேலும், பொருளருகு லென்சுக்கும் கண்ண ருகு லென்சுக்கும் உள்ள தொலைவு யாது? 1 தொலைவில் பிரிந்து காணப்படும் இரண்டு விண்மீன்களை, இத்தொலைநோக்கி வழியாகக் காணும்போது அவ்விண்மீன்களுக்கு இடையே உள்ள தொலைவு யாது?

தீர்வு               

f0 = 125 cm; fe = 2 cm; m = ?; L = ?; θ = ?

தொலைநோக்கியின் உருப்பெருக்கம் அல்லது உருப்பெருக்கும் திறன், m = f0/fe

மதிப்புகளைப் பிரதியிடும்போது, m = 125/2 62.5

தொலை நோக்கியின் தோராய நீளம், L = f0 + fe

மதிப்புகளைப் பிரதியிடும் போது,

L = 125+2 = 127 cm = 1.27 m

கோண உருப்பெருக்கத்திற்கான சமன்பாடு,

m= θi / θ0

மாற்றியமைக்கும்போது, θi =m x θ0

மதிப்புகளைப் பிரதியிடும் போது,

θi = 62.5x1' = 62.5' /60  =1.04°

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்