உயிரினங்களின் ஒருங்கமைவு | அலகு 18 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - உயிரியல் ஒருங்கமைவு | 8th Science : Chapter 18 : Organisation of Life
Posted On : 30.07.2023 06:05 am
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 18 : உயிரினங்களின் ஒருங்கமைவு
உயிரியல் ஒருங்கமைவு
உயிரியல் ஒருங்கமைவு மிக நுண்ணிய மூலக்கூறு நிலையில் துவங்கி, நுண்ணிய செல் மற்றும் நுண்ணிய அல்லது மிகப்பெரிய உயிரினங்கள் வரை உள்ளது. இறுதியில் இது சூழ்நிலை மண்டலம் மற்றும் உயிர்க்கோளத்தில் நிறைவடைகிறது.
உயிரியல் ஒருங்கமைவு
உயிரியல் ஒருங்கமைவு மிக நுண்ணிய மூலக்கூறு நிலையில் துவங்கி,
நுண்ணிய செல் மற்றும் நுண்ணிய அல்லது மிகப்பெரிய உயிரினங்கள் வரை உள்ளது. இறுதியில்
இது சூழ்நிலை மண்டலம் மற்றும் உயிர்க்கோளத்தில் நிறைவடைகிறது. ஆக, உயிரியல் ஒருங்கமைவானது எளிய உயிரினங்களிலிருந்து
சிக்கலான உயிரினமாக பல்வேறு படிநிலைகளில் காணப்படுகிறது. அணுக்கள் என்பவை மிக நுண்ணிய
நிலையின் கீழ்மட்ட அலகாகவும், செல்கள் நுண்ணிய நிலையின் மிகச் சிறிய அலகாகவும் உள்ளன
என்பதை உயிரியல் ஒருங்கமைப்பின் படிநிலை புலப்படுத்துகிறது. அணுக்கள் இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. மூலக்கூறுகள்
வேதிவினை மூலம் செல்களுக்குள் நுண் உறுப்புகளை உருவாக்குகின்றன. ஒரு செல்பல நுண் உறுப்புகளைக்
கொண்டுள்ளது. ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிற ஒரே மாதிரியான அமைப்பைக்கொண்ட
செல்களின் தொகுப்பு திசுவாக உள்ளது. பல்வேறு வகையான திசுக்கள் இணைந்து, உடலில் ஒரு
குறிப்பிட்ட பணியைச் செய்யக்கூடிய உறுப்புகளை உருவாக்குகின்றன. பல்வேறு வகையான உறுப்புகள்
இணைந்து குறிப்பிட்ட உடலியல் நிகழ்வுகளைச் செய்யக்கூடிய உறுப்பு மண்டலங்களை உருவாக்குகின்றன.
பல்வேறு வகையான் உறுப்பு மண்டலங்கள் இணைந்து உயிரினத்தை உருவாக்குகின்றன. ஒரு உயிரினத்தில்
பல்வேறு வகையான மண்டலங்கள் உள்ளன என்பதையும், அவை பலசெல் உயிரினங்களில் பல்வேறு வாழ்வியல்
செயல்பாடுகளைச் செய்கின்றன என்பதையும் நாம் காண்கிறோம்.

எளிய உயிரினங்களில் தொடங்கி
மிகவும் சிக்கலான உயிரினங்கள் வரை உயிரியல் வாழ்க்கையானது பல்வேறு அமைப்பு நிலைகளைக்
கடந்துவந்துள்ளது. உயிரியல் ஒழுங்கமைப்பின் பல்வேறு மட்டங்களை படம் 18.1 ல் காணலாம்.