உயிரினங்களின் ஒருங்கமைவு | அலகு 18 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - செல் | 8th Science : Chapter 18 : Organisation of Life

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 18 : உயிரினங்களின் ஒருங்கமைவு

செல்

செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும். செல்கள் பொதுவாக உயிரினங்களின் கட்டுமான அலகுகள் எனப்படுகின்றன. செல்களைப் பற்றிய பாடப்பிரிவு செல் உயிரியல் எனப்படும்.

செல்

செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும். செல்கள் பொதுவாக உயிரினங்களின் கட்டுமான அலகுகள் எனப்படுகின்றன. செல்களைப் பற்றிய பாடப்பிரிவு செல் உயிரியல் எனப்படும். செல்கள் சவ்வினால் சூழப்பட்ட சைட்டோபிளாசத்தைக் கொண்டுள்ளன. இந்த சைட்டோபிளாசமானது புரதங்கள், உட்கரு


அமிலங்கள் போன்ற பல உயிரியல் மூலக்கூறுகளைப் பெற்றுள்ளது. செல்கள் அவற்றின் அளவு மற்றும் வடிவத்தைப் பொருத்து வேறுபடுகின்றன. செல்லின் மையத்தில் கோள வடிவ உட்கரு காணப்படுகிறது. மேலும், அகப்பிளாச வலை, மைட்டோகாண்ட்ரியா, உடல்கள், சென்ட்ரியோல்கள், கோல்கை ரிபோசோம்கள் போன்ற பல்வேறு நுண்ணுறுப்புகளும் சைட்டோபிளாசத்திற்குள் காணப்படுகின்றன. செல்லின் ஒவ்வொரு செல் நுண்ணுறுப்பும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிறது.

ஒவ்வொரு விலங்கிலும் செல்லின் அளவு வேறுபடுகின்றது. விலங்குகளில் செல்களின் அளவு மைக்ரான் (um) என்ற அலகால் அளக்கப்படுகிறது. (ஒரு மைக்ரான் என்பது 1/1000000 மீட்டருக்குச் சமமாகும்). செல்களின் சராசரி அளவு 0.5 முதல் 20 மைக்ரான் விட்டம் வரை வேறுபடுகிறது. பாக்டீரியா செல்லின் அளவு மிகவும் சிறியதாக இருக்கும் (1- 2 um). மனித உடலின் மிகச் சிறிய செல் இரத்த சிவப்பணுக்கள் (விட்டம் 7 um) ஆகும். மிக நீண்ட செல் 90 100 செ.மீ வரை நீளம் கொண்ட நரம்பு செல் ஆகும். மனித அண்ட செல் 100 pm அளவுடையது. பலசெல் விலங்குகளின்

நமது உடலானது கருமுட்டை (சைகோட் என்ற ஒற்றை செல்லிலிருந்தே உருவாக்கப்படுகிறது. கருமுட்டையானது தொடர்ச்சியான பல மைட்டாசிஸ் பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு, வடிவம் மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களாலான கருவை உருவாக்குகிறது. கருச் செல்கள் படிப்படியாக அவற்றின் அமைப்பிலும், பணியிலும் மாற்றங்களை அடைகின்றன. இந்நிகழ்வுக்கு செல் மாறுபாடடைதல் என்று பெயர். செல்களில் மிகப் பெரிய செல், நெருப்புக் கோழியின் முட்டை ஆகும். 0.0001 மி.மீ அளவுடைய மைக்கோ பிளாஸ்மாவே மிகச்சிறிய பாக்டீரியம் ஆகும்.


 

வடிவம்

செல்கள் வெவ்வேறு வடிவம் கொண்டவை. பொதுவாக அவற்றின் பணியினைப் பொருத்து அவை வேறுபடுகின்றன. சில செல்கள் முட்டை அல்லது உருண்டை வடிவம் கொண்டவை. வேறு சில செல்கள் நீளமானவை. நரம்பு செல்கள் போன்ற சில செல்கள் கிளைத்தவை. சில இரத்த வெள்ளையணுக்கள் அமீபா போன்று வெளிப்புறத்தில் ஒழுங்கற்று வடிவம் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தங்கள் வடிவத்தை மாற்றிக் கொள்கின்றன.


செயல்பாடு 1

கோழிமுட்டையை வேக வைத்து அதன் ஓட்டினை நீக்கு. என்ன காண்கிறாய்? மஞ்சள் கருவைச் சூழ்ந்து வெள்ளைக்கரு உள்ளது. வெள்ளைக் கருவானது ஆல்புமின் எனப்படும். அது வேகவைக்கும் போது திடப்பொருளாக மாறுகிறது. இது ஒற்றைச் செல்லின் ஒரு பகுதிப்பொருள் ஆகும். இந்த ஒருசெல் முட்டையை வெறும் கண்ணாலேயே நம்மால் காண முடியும்.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 18 : உயிரினங்களின் ஒருங்கமைவு