Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி : பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

16. பின்வருவன பற்றி சிறு குறிப்பு வரைக

() உடனிசைவு

 () பிணைப்பில்லா உடனிசைவு

விடை

) உடனிசைவு

சில கரிமச்சேர்மங்களில் இரட்டைப்பிணைப்பு தகுந்த இடங்களில் காணப்படும் நிலையில் இவ்விளைவு உணரப்படுகிறது. பிணைப்பு மற்றும் தனித்த இரட்டை எலக்ட்ரான்களின் இடஅமைப்பில் மட்டுமே மாறுபடும் ஒன்றிற்கும் மேற்பட்ட வடிவமைப்புகளின் மூலம் குறிப்பிட்ட சில கரிமச் சேர்மங்களைக் குறிப்பிட இயலும், அமைப்புகள் உடனிசைவு அமைப்புகள் எனவும் இந்நிகழ்வு உடனிசைவு எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் இந்நிகழ்வு மீசோமெரிக் விளைவு எனவும் அழைக்கப்படுகிறது.

) பிணைப்பில்லா உடனிசைவு

σ - பிணைப்பு எலக்ட்ரான்களின் உள்ளடங்காத தன்மை Hyper Conjucation என அழைக்கப்படுகின்றது. σ - பிணைப்பில் உள்ள எலக்ட்ரான்கள் (வழக்கமாக C - H அல்லது C – C பிணைப்பு எலக்ட்ரான்கள்) அதன் அருகாமையில் உள்ள பிணைப்பில் ஈடுபடா p ஆர்பிட்டால் அல்லது σ*, π* போன்ற எதிர்பிணைப்பு ஆர்பிட்டால்களுடன் இடைவினை புரிவதால் ஏற்படும் ஒரு தனித்த நிலைப்புத்தன்மை பெறச் செய்யும் விளைவு Hyper conjucation எனப்படும்


17. கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணம் தருக.

விடை

கருக்கவர் பொருள்கள்

1. நேர்மின் தன்மையுடைய மையத்தின் மீது அதிக நாட்டமுடையவை.

2. பிணைப்பில் ஈடுபடா e- கொண்டவை.

3. லூயி காரங்கள்

4. எலக்ட்ரானை வழங்குபவை

5. எகா.NH3, H2S, Cl-, CN-

எலக்ட்ரான் கவர் பொருள்கள்

1. எதிர்மின் சுமையை நோக்கி கவரப்படுபவை.

2. நேர்மின் சுமை கொண்ட அயனிகள் () e- பற்றாக்குறை கொண்ட நடுநிலை மூலக்கூறுகள்

3. லூயி அமிலங்கள்

4. எலக்ட்ரானை ஏற்பவை

5. எகா.CO2, +NO2, H+



18. வளைந்த அம்புக்குறியீட்டினை பயன்படுத்தி சகப்பிணைப்பின் சீரற்ற பிளத்தலை சுட்டிக் காட்டுவதுடன் பின்வரும் சமன்பாடுகளை பூர்த்தி செய்க. ஒவ்வொரு வினையிலும் கருக்கவர் பொருளைக் கண்டறிக

(i) CH3 - Br + KOH →

(ii) CH3 - OCH3 + HI →

விடை:

i) CH3 - Br + KOH → CH3 - OH + KBr 

இதில் OH- கருக்கவர் பொருள் ஆகும்.



19. தூண்டல் விளைவினை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக

விடை:

தூண்டல் விளைவு (I) :

ஒரு மூலக்கூறில், அருகாமையில் உள்ள பிணைப்பு, அணு அல்லது தொகுதியினால் அம் மூலக்கூறில் உள்ள ஒரு சகப்பிணைப்பின் முனைவாதலில் ஏற்படும் மாற்றம் தூண்டல் விளைவு என வரையறுக்கப்படுகிறது.

எத்தில் குளோரைடில் காணப்படும் C - C பிணைப்பு முனைவுத்தன்மை உடையது. கார்பனைக் காட்டிலும் குளோரினானது அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடையது. எனவே C - Cl பிணைப்பில் உள்ள சகப்பிணைப்பு எலக்ட்ரான்களை குளோரின் தன்னை நோக்கி ஈர்க்கும் பண்பினைப் பெற்றுள்ளது

இதன் விளைவாக Cl ன் மீது சிறிய எதிர்மின் தன்மையும் அதோடு இணைக்கப்பட்டுள்ளள C ன் மீது சிறிய நேர்மின் தன்மையும் ஏற்படும். இதனை ஈடுசெய்யும் பொருட்டு, C1 ஆனது அதற்கும் C2 ற்கும் இடைப்பட்ட எலக்ட்ரான் இணையினை தன்னை நோக்கிக் கவர்கிறது. இத்தகைய முனைவாதல் தூண்டல் விளைவு என அழைக்கப்படுகின்றது

இவ்விளைவானது அருகாமை பிணைப்புகளில் அதிகளவு உணரப்படுகிறது எனினும் மின்சுமை பிரிப்பான் (charge separation) அளவானது Cl லிருந்து நகர்ந்து செல்லச் செல்ல குறைகிறது.

மேலும் இவ்விளைவு அதிகபட்சமாக இருகார்பன் அணுக்கள் வரை உணரப்படுகிறது. தூண்டல் விளைவிற்கு காரணமான தொகுதியிலிருந்து நான்கு பிணைப்புகளுக்கு அப்பால் இவ்விளைவு மிக குறைவாதலால் முக்கியத்துவமற்றதாகிறது.



20. எலக்ட்ரோமெரிக் விளைவினை விளக்குக.

விடை:

எலக்ட்ரோமெரிக்விளைவு (F) :

நிறைவுறா சேர்மங்களில் (> C = C <, > C = O, போன்றவற்றை பெற்றுள்ள சேர்மங்களில்) தாக்கும் வினைபொருள் முன்னிலையில் நடைபெறும் ஒரு தற்காலிகமான விளைவு எலக்ட்ரோமெரிக் விளைவு எனப்படும்.

கார்பனைல்  தொகுதியைக் கொண்டுள்ள ஒரு சேர்மம்:

கருகவர் பொருள், கார்பனைல் சேர்மத்தை அணுகும் போது, C மற்றும் 'O' அணுக்களுக்கிடையே காணப்படும் எலக்ட்ரான்கள் அக்கணத்தில் அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய 'O' அணுவிற்கு மாற்றப்படுகிறது.

இதன் விளைவாக கார்பனானது எலக்ட்ரான் பற்றாக்குறையுடைய தன்மையினைப் பெறுகிறது. எனவே உள்வரும் கருக்கவர் பொருள் கார்பனைல் கார்பனுடன் புதிய பிணைப்பு ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழல் உருவாகிறது.


மாறாக H+ போன்ற எலக்ட்ரான் கவர் பொருள் ஆல்கீனை அணுகும் போது, எலக்ட்ரான்கள் அக்கணத்தில் எலக்ட்ரான் கவர் பொருளுக்கு மாற்றப்பட்டு கார்பனுக்கும் ஹைட்ரஜனுக்கும் இடையே புதிய பிணைப்பு உருவாகிறது. இதன் விளைவாக மற்றொரு கார்பன் நேர்மின் சுமையுடையதாகிறது.



21. பின்வரும் வகை கரிமவினைகளுக்கு உதாரணம் தருக.

(i) β - நீக்க வினை

(ii) எலக்ட்ரான் கவர் பொருள் பதிலீட்டு வினை.

விடை:

i) β- நீக்கவினை

● n - புரப்பைல் புரோமைடை ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைப்படுத்தும் போது புரப்பீன் உருவாகிறது. இவ் வினையில் H மற்றும் Br நீக்கப்படுகின்றது.


11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்