11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

C++ : கோவை

கோவை என்பது C++ விதிமுறைக்குட்பட்ட சீராக உள்ள செய்முறைகள், மாறிலிகள் மற்றும் மாறிகளின் கூட்டாகும்.

கோவை (Expression):


கோவை என்பது C++ விதிமுறைக்குட்பட்ட சீராக உள்ள செய்முறைகள், மாறிலிகள் மற்றும் மாறிகளின் கூட்டாகும். இது திருப்பி அனுப்பும் மதிப்பையுடைய செயற்கூறுகளையும் உள்ளடக்கியதாகும். செயற்கூறுகளைப் பற்றி பின்வரும் பாடங்களில் காணலாம்.

கோவை ஒரு மதிப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட செயலேற்பிகள் மற்றும் சுழியம் அல்லது அதற்கு மேற்பட்ட செயற்குறிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. C++-ல், ஏழு விதமான கோவைகள் உள்ளன. அவையாவன : 

(i) மாறிலிக் கோவை 

(ii) முழு எண் கோவை 

(iii) மிதப்புப் புள்ளி கோவை 

(iv) ஒப்பீட்டுக் கோவை 

(v) தருக்கக் கோவை 

(vi) பிட்நிலை கோவை 

(vii) சுட்டுக் கோவை 



11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்