Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் | 6th Science : Term 2 Unit 3 : Changes Around Us

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

ஒரு பொருள் தன்னுடைய நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வே மாற்றம் எனப்படும். பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடே மாற்றம் எனப்படும்.

அலகு 3

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்



 

கற்றல் நோக்கங்கள்

நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒரு சில மாற்றங்களை அடையாளம் கண்டு பதிவு செய்தல்

காணப்பட்ட மாற்றங்களை வகைப்படுத்துதல்

₹ மெதுவான / வேகமான மாற்றங்கள், மீள் / மீளா மாற்றங்கள்

₹ இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்

₹ விரும்பத்தக்க / விரும்பத்தகாத மாற்றங்கள், இயற்கையான / மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்

கரைதல் செயல்பாட்டினை விளக்குதல்

ஒரு கரைப்பான் மற்றும் கரை பொருளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டினைக் காணுதல்.

 

முன்பக்கத்தில் உள்ள படங்களை உற்று நோக்கிக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்பவும்.


மேற்கண்ட இணைகளில் காணப்படும் பொதுவான நிகழ்வு என்ன?

 

அறிமுகம்

மாற்றம் என்றால் என்ன?

ஒரு பொருள் தன்னுடைய நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வே மாற்றம் எனப்படும். பொருளின் ஆரம்ப நிலைக்கும் இறுதி நிலைக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடே மாற்றம் எனப்படும்.

மாற்றம் என்பது இயற்கையின் நியதியாகும். நம் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றிப் பல மாற்றங்களைக் காண்கிறோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் வானிலையில் மாற்றம் நிகழ்கிறது. இதேபோல் பருவத்திலும் மாற்றம் நிகழ்கிறது. காகிதம் தீப்பிடித்த உடனே எரிகிறது. ஆனால் இரும்பு ஆணி துருப்பிடிக்க சில நாட்கள் ஆகின்றன. பால் தயிராக மாற சில மணிநேரங்களை எடுத்துக் கொள்கிறது. ஆனால், சமைக்கும் போது சில நிமிடங்களில் காய்கறிகள் வெந்து விடுகின்றன. மாற்றங்கள் என்பது வடிவம், நிறம், வெப்பநிலை, நிலை மற்றும் இயைபு போன்ற பண்புகளில் (எந்தப் பண்பிலும்) நிகழலாம். பொருட்களில் ஏற்படுத்தப்படும் இத்தகைய மாற்றங்களில் சிலவற்றை நாம் கண்களால் காணமுடியும் சிலவற்றைக் கண்களால் காண இயலாது சில மாற்றங்களை உற்றுநோக்கி அவற்றைப் பற்றி எழுதவும்.


செயல்பாடு 1: பலூன் ஒன்றில் காற்றை நிரப்பும் போது நிகழ்வது என்ன ?

வடிவத்தில் மாற்றம் ஏற்படுகிறதா?


₹ ஆம் ₹ இல்லை

அளவில் மாற்றம் ஏற்படுகிறதா?

₹ ஆம் ₹ இல்லை

வேறு ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா?

₹ ஆம் ₹ இல்லை

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்