Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | குறியுறு செயற்கூறுகள் (ctype.h) - C++ -ல் உள்ள தலைப்பு கோப்புகள் மற்றும் உள்ளமைந்த செயற்கூறுகள்

11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்

குறியுறு செயற்கூறுகள் (ctype.h) - C++ -ல் உள்ள தலைப்பு கோப்புகள் மற்றும் உள்ளமைந்த செயற்கூறுகள்

இந்த தலைப்பு கோப்பில் குறியுறுக்கு தேவையான பல்வேறு செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

குறியுறு செயற்கூறுகள் (ctype.h)


இந்த தலைப்பு கோப்பில் குறியுறுக்கு தேவையான பல்வேறு செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பு கோப்பில் உள்ள பல்வேறு குறியுறு செயற்கூறுகளைக் கீழே விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இவ்வகை செயற்கூறுகளை நிரலில் பயன்படுத்தும் போது ctype.h என்ற தலைப்பு கோப்பை நிரலில் சேர்க்கப்பட வேண்டும். 


1. isalnum()


இந்த செயற்கூற்றைப் பயன்படுத்தி ஒரு குறியுறுவை ஆங்கில எழுத்தா என்று கண்டறியலாம். உள்ளீடு எண் அல்லது எழுத்தாக இருந்தால் இந்த செயற்கூறு சுழி அல்லாத மதிப்பைத் திருப்பி அனுப்பும், அல்லது சுழியம் என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும். 


பொது வடிவம் :

int isalnum (char c)


எடுத்துக்காட்டு :

int r = isalnum(‘5’);

cout << isalnum('A') <<’\t’<<r;

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில், உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு ஒரு ஆங்கில எழுத்தாகவோ அல்லது எண்ணாகவோ இல்லை அதனால் n என்ற மாறியில் 0 (பூஜ்ஜியம் ) என்ற மதிப்பை இருத்தும்.

char c = '$';

int n = isalnum(c);

cout<<c;

வெளியீடு:

0


நிரல் 11.3

#include<iostream>

#include<stdio.h>

#include<ctype.h>

using namespace std;

int main()

{

      char ch;

      int r;

      cout<<"\n Type a Character :";

      ch = getchar();

      r = isalnum(ch);

      cout<<"\nThe Return Value of isalnum(ch) is :"<<r;

}

வெளியீடு-1:

Type a Character :A

The Return Value of isalnum(ch) is :1

வெளியீடு-2:

Type a Character :?

The Return Value of isalnum(ch) is :0

 

2. isalpha()


isalpha() செயற்கூறு உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு ஆங்கில எழுத்தாக உள்ளதா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்கப் பயன்படுகிறது. 


பொது வடிவம்:

isalpha(char c);

இந்த செயற்கூறு உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு ஆங்கில எழுத்தாக இருந்தால் 1 என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும் அல்லது 0 என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும். கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் குறியுறு எழுத்தாக இல்லையெனில், வெளியீடு 0 ஆக இருக்கும்.

int n = isalpha(‘3’);

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் குறியுறு எழுத்தாக உள்ளது. அதனால் இதன் வெளியீடு 1 - ஆக இருக்கும்.

cout << isalpha('a');


நிரல் 11.4 

#include<iostream>

#include<stdio.h>

#include<ctype.h>

using namespace std;

int main()

{

      char ch;

      cout << "\n Enter a charater: ";

      ch = getchar();

      cout<<"\n The Return Value of isalpha(ch) is :" << isalpha(ch) ;

}

வெளியீடு -1:

Enter a charater: A

The Return Value of isalpha(ch) is :1

வெளியீடு - 2:

Enter a charater: 7

The Return Value of isalpha(ch) is :0

 

3. isdigit() 


உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எண்ணாக உள்ளதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க இந்த செயற்கூறு பயன்படுகிறது. உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு எண்ணாக இருந்தால் இந்த செயற்கூறு 1 என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும் அல்லது ) என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும். 

பொது வடிவம்:

isdigit(char c);


நிரல் 11.5

using namespace std;

#include<iostream>

#include<ctype.h>

int main()

{

      char ch;

      cout << "\n Enter a Character: ";

      cin >> ch;

      cout<<"\n The Return Value of isdigit(ch) is :" << isdigit(ch) ;

}

வெளியீடு -1

Enter a Character: 3

The Return Value of isdigit(ch) is :1

வெளியீடு -2

Enter a Character: A

The Return Value of isdigit(ch) is :0

 

*Return 0; தற்போது உள்ள நிரல்பெயர்ப்பில் இது கட்டாயம்மில்லை

 

4. islower()


இந்த செயற்கூறு உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு எழுத்து ஆங்கில சிறிய எழுத்தாக உள்ளதா அல்லது இல்லையா என்று சரிபார்க்கும். உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு எழுத்து ஆங்கில சிறிய எழுத்தாக இருந்தால் இந்த செயற்கூறு பூஜ்ஜியம் அல்லாத மதிப்பைத் திருப்பி அனுப்பும், இல்லையேல் 0 (பூஜ்ஜியம்) என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும். 

பொது வடிவம்:

int islower(char c);

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை இயக்கிய பின், உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எழுத்து சிறிய எழுத்தாக உள்ளதால் 'n' என்ற மாறியில் 1 என்ற மதிப்பை இருத்தும். 

எடுத்துக்காட்டு 

char ch = 'n';

int n = islower(ch);


ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில், உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எழுத்து ஆங்கில பெரிய எழுத்தாக உள்ளதால் n என்ற மாறியின் மதிப்பு) ஆக இருத்தும்.

int n = islower('P');


5. isupper()


உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எழுத்து ஆங்கில பெரிய எழுத்தாக உள்ளதா என்று சரிபார்க்க இந்த செயற்கூறு பயன்படும். உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு எழுத்து ஆங்கில பெரிய எழுத்தெனில் இந்த செயற்கூறு 1 என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும் அல்லது 0 என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் n என்ற மாறியில் மதிப்பு 1 என்றும் M என்ற மாறியில் மதிப்பு 0 என்றும் இருத்தும்.

பொது வடிவம்:

isupper(char c);

int n=isupper('A');

int m=isupper('a');


6. toupper()


உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எழுத்து ஆங்கில பெரிய எழுத்தாக மாற்ற இந்த செயற்கூறு பயன்படுகிறது. உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு எழுத்து ஆங்கில பெரிய எழுத்தாகவே இருந்தால், வெளியீடு அதே குறியுறுவாக இருக்கும். 


பொது வடிவம்:

char toupper(char c); 

கீழே கொடுக்கப்பட்ட கூற்று c என்ற மாறியில் 'K' என்ற மதிப்பிருத்தும்.

char c = toupper('k'); 

ஆனால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றின் வெளியீடு 'B' ஆகவே இருக்கும்.

cout <<toupper('B');


7. tolower()


உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எழுத்தை ஆங்கில சிறிய எழுத்தாக மாற்ற இந்த செயற்கூறு பயன்படுகிறது. உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு எழுத்தை ஆங்கில சிறிய எழுத்தாக இந்த செயற்கூறு திருப்பி அனுப்பும். உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு ஆங்கில சிறிய எழுத்தாகவே இருந்தால், வெளியீடு அதே குறியுறுவாக இருக்கும்.


பொது வடிவம்:

char tolower(char c);

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் என்ற மாறியில் 'k' என்ற மதிப்பை இருத்தும்.

char c = tolower('K'); 

ஆனால், இந்த கூற்றில் வெளியீடு 'b' ஆகவே இருக்கும்.

cout <<tolower('b');


11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்