Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | உள்ளீடு / வெளியீடு (stdio.h) - C++ -ல் உள்ள தலைப்பு கோப்புகள் மற்றும் உள்ளமைந்த செயற்கூறுகள்

11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்

உள்ளீடு / வெளியீடு (stdio.h) - C++ -ல் உள்ள தலைப்பு கோப்புகள் மற்றும் உள்ளமைந்த செயற்கூறுகள்

இந்த தலைப்பு கோப்பில் (உள்ளீடு / வெளியீடு (I/O) செயற்கூறுகளான getchar(), putchar(), gets() மற்றும் puts() போன்றவற்றை முன்னரே வரையறுக்கப்பட்டுள்ளது.

உள்ளீடு / வெளியீடு (stdio.h)


இந்த தலைப்பு கோப்பில் (உள்ளீடு / வெளியீடு (I/O) செயற்கூறுகளான getchar(), putchar(), gets() மற்றும் puts() போன்றவற்றை முன்னரே வரையறுக்கப்பட்டுள்ளது.


1. getchar() மற்றும் putchar() செயற்கூறுகள்


முன்னரே வரையறுக்கப்பட்ட getchar() என்ற செயற்கூறினைப் பயன்படுத்தி விசைப்பலகையின் மூலம் ஒரு எழுத்தையும் உள்ளீடு செய்யலாம் மற்றும் putchar() என்ற செயற்கூறின் மூலம் அந்த எழுத்தையும் வெளியீடும் செய்யலாம்.


நிரல் 11.1 C++ மொழியில் ஒரு எழுத்தை உள்ளீடவும் மற்றும் வெளியிடுவதற்கான நிரல்

#include<iostream>

#include<stdio.h>

using namespace std;

int main()

{

      cout<<"\n Type a Character : ";

      char ch = getchar();

      cout << "\n The entered Character is: ";

      putchar(ch);

      return 0;

}

வெளியீடு:

Type a Character : T

The entered Character is: T

 

2. gets() மற்றும் puts() செயற்கூறுகள்


gets() செயற்கூறின் மூலம் standard உள்ளீடு மூலம் ஒரு சரத்தை உள்ளீடு செய்து அதை சரத்திற்கான மாறியில் சேமித்து வைக்கலாம். puts() செயற்கூறு, gets() செயற்கூறின் மூலம் உள்ளீடாக பெற்ற சரத்தை ஒரு புதிய வரியில் வெளியிடச் செய்யும்.

 

நிரல் 11.2 சரத்தை உள்ளீடு மற்றும் வெளியீடு செய்வதற்கான C++ நிரல் :

#include<iostream>

#include<stdio.h>

using namespace std;

int main()

{

      char str[50];

      cout<<"Enter a string : ";

      gets(str);

      cout<<"You entered: "

      puts(str);

      return(0);

}

வெளியீடு:

Enter a string : Computer Science

You entered: Computer Science


11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்