Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | வேதிப்பிணைப்பு

அறிமுகம் - வேதிப்பிணைப்பு | 9th Science : Chemical bonding

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : வேதிப்பிணைப்பு

வேதிப்பிணைப்பு

ஒரு பூமாலையில் உள்ள பூக்கள் நூலினால் பிணைக்கப்பட்டிருப்பதைப் போல, மூலக்கூறில் உள்ள அணுக்களும் குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அணுக்களை இணைக்கும் இக்கவர்ச்சி விசையே வேதிப்பிணைப்பு எனப்படுகிறது.

அலகு 13

வேதிப்பிணைப்பு


 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின், மாணவர்கள் பெறும் திறன்களாவன:

மூலக்கூறுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும், வேதிப்பிணைப்பு என்றால் என்ன என்பதையும் அறிந்துகொள்ளல்.

எண்ம விதியை விளக்குதல்.

 அணுக்களுக்கான லூயிஸ் புள்ளி அமைப்பை வரைதல்.

  பல்வேறு வகையான பிணைப்புகளைப் பற்றி அறிந்துகொள்ளல்.

அயனிப்பிணைப்பு, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சக பிணைப்புகளின் தன்மைகளை வேறுபடுத்துதல்.

ஆக்ஸிஜனேற்ற, ஒடுக்கவினைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

பல்வேறு தனிமங்களின் ஆக்ஸிஜனேற்ற எண்ணைக் கண்டறிதல்.

 

அறிமுகம்

பருப்பொருளின் கட்டமைப்புக் கூறுகள் அணுக்கள் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். மந்தவாயு அணுக்களைத் தவிர, மற்ற அணுக்கள் சாதாரண நிலையில் இயற்கையில் தனித்துக் காணப்படுவதில்லை. எனினும், ஒரு குழுவாக அணுக்கள் இணைந்து ஓரே பொருளாகக் காணப்படுகின்றன. இவ்வாறு அணுக்களால் இணைக்கப்பட்ட தொகுதியே மூலக்கூறு எனப்படுகிறது. ஒரு பூமாலையில் உள்ள பூக்கள் நூலினால் பிணைக்கப்பட்டிருப்பதைப் போல, மூலக்கூறில் உள்ள அணுக்களும் குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அணுக்களை இணைக்கும் இக்கவர்ச்சி விசையே வேதிப்பிணைப்பு எனப்படுகிறது.


வேதிப்பிணைப்பு என்பதை ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களை ஒன்றாக சேர்த்து, பிணைத்து வைக்கும் கவர்ச்சி விசை என வரையறுக்கலாம். இப்பாடத்தில் வேதிப்பிணைப்பு பற்றிய கோசல்லூயிஸ் கொள்கை, லூயிஸ் புள்ளி அமைப்பு மற்றும் வேதிவினைகளின் வகைகளைப் பற்றி காண்போம்.


9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : வேதிப்பிணைப்பு