Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | அன்றாட வாழ்வில் வேதியியல்

அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் | 8th Science : Chapter 15 : Chemistry in Everyday Life

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்

அன்றாட வாழ்வில் வேதியியல்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ ஹைட்ரோகார்பன்கனின் வகைகள் பற்றி அறிந்து கொள்ளல். ❖ படிம எரிபொருள்கள் உருவாதலைப் புரிந்து கொள்ளல். ❖ வெவ்வேறு எரிபொருள் வாயுக்களின் பண்புகளையும், பயன்களையும் பட்டியலிடுதல். ❖ பெட்ரோலியத்தை சுத்திகரிப்பதில் உள்ள செயல்முறைகளைப் பற்றி அறிந்துகொள்ளல் ❖ நிலக்கரியின் பயன்களையும், வகைகளையும் பற்றி அறிந்துகொள்ளல். ❖ நல்லியல்பு எரிபொருளின் பண்புகளைப் பற்றி அறிந்துகொள்ளல். ❖ சூரிய ஆற்றலின் பயன்பாடுகளைப் பட்டியலிடுதல்

அலகு 15

அன்றாட வாழ்வில் வேதியியல்


 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

ஹைட்ரோகார்பன்கனின் வகைகள் பற்றி அறிந்து கொள்ளல்.

படிம எரிபொருள்கள் உருவாதலைப் புரிந்து கொள்ளல்.

வெவ்வேறு எரிபொருள் வாயுக்களின் பண்புகளையும், பயன்களையும் பட்டியலிடுதல்.

பெட்ரோலியத்தை சுத்திகரிப்பதில் உள்ள செயல்முறைகளைப் பற்றி அறிந்துகொள்ளல்

நிலக்கரியின் பயன்களையும், வகைகளையும் பற்றி அறிந்துகொள்ளல்.

நல்லியல்பு எரிபொருளின் பண்புகளைப் பற்றி அறிந்துகொள்ளல்.

சூரிய ஆற்றலின் பயன்பாடுகளைப் பட்டியலிடுதல்



 

அறிமுகம்

வேதியியல் என்ற வார்த்தையை நாம் கேட்டும்பொழுது ஆய்வகங்களில் நடக்கும் பல்வேறுவகையான வேதி வினைகளைப்பற்றியே நினைக்கிறோம். ஆனால், வேதியியல் என்பது அதற்கும் அப்பாற்பட்டது. நம்மைச் சுற்றிலும் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளிலும் நாம் வேதியியலைக் காணமுடியும். நாம் சுவாசிக்கும் காற்று, நாம் உண்ணும் உணவு மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களிலும் வேதியியல் உள்ளது. நம்முடைய உடலும் நைட்ரஜன், பாஸ்பரஸ், ஹைட்ரஜன், ஆக்சிஜன், கால்சியம், பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம் போன்ற தனிமங்களால் ஆனது. நம் உடலில் நடைபெறும் பல்வேறு வேதிவினைகள் வேதியியலால் நடைபெறுகின்றன.

நம்முடைய வாழ்க்கை முழுவதும் பல்வேறு வேதிச் சேர்மங்களைச் சார்ந்துள்ளது. அவற்றுள் ஹைட்ரோகார்பன்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். அவை நமது வாழ்வில் பல்வேறு வழிகளில் பயன்படுகின்றன. ஒட்டுமொத்த நாகரிகமும் ஹைட்ரோகார்பன்களின் உதவியாலேயே வளர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், அவை படிம் எரிபொருள்களான பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இயற்கை வாயுக்களை உண்டாக்குகின்றன. இப்பாடத்தில் ஹைட்ரோகார்பன்கள், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இயற்கை வாயுக்கள் போன்ற புதைபடிவ எரிபொருள்கள், எரிபொருள்களின் பண்புகள் மற்றும் சூரிய ஆற்றலின் பயன்பாடுகளைப் பற்றி படிக்க இருக்கிறோம்.

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்