Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | சரியான விடையை தெரிவு செய்க

விலங்குலகம் | விலங்கியல் - சரியான விடையை தெரிவு செய்க | 11th Zoology : Chapter 2 : Kingdom Animalia

11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம்

சரியான விடையை தெரிவு செய்க

11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம் : சரியான விடையை தெரிவு செய்க, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

மதிப்பீடு:


1. நிடேரியாயில் காணப்படும் சமச்சீர் அமைப்பு

அ) ஆர

ஆ) இருபக்க

இ) ஐந்தறைகளுடைய ஆர

ஈ) சமச்சீரற்ற

விடை: அ) ஆர


2. கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி

அ) புரோட்டோசோவா 

ஆ) போரிஃபெரா 

இ) சீலென்டிரேட்டா

ஈ) எகினோடெர்மேட்டா

விடை: இ) சீலென்டிரேட்டா



3. தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள்

அ) புரோட்டோநெஃப்ரிடியா

ஆ) சுடர் செல்கள்

இ) சொலினோசைட்டுகள்

ஈ) இவை அனைத்தும்

விடை: ஆ) சுடர் செல்கள்


4. கீழ்ச்காணும் எந்த உயிரியில் 'சுயக் கருவுறுதல்" நடைபெறுகிறது?

அ) மீன்

ஆ) உருளைப்புழு

இ) மண்புழு

ஈ) கல்லீரல் புழு

விடை: ஈ) கல்லீரல் புழு


5. மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கீழ்க்காணும் உறுப்பு செய்யும் அதே செயலைச் செய்கிறது.

அ) இறாலின் செவுள்கள்

ஆ) பிளனேரியாவின் சுடர் செல்கள்

இ) பூச்சிகளின் சுவாசக்குழல்

ஈ) ஹைட்ராயின் தெமட்டோபிளாஸ்ட்டுகள்

விடை: ஆ) பிளனேரியாவின் சுடர் செல்கள்


6. இவற்றுள் எது உண்மையான உடற்குழியைக் கொண்டது

அ) அஸ்காரிஸ்

ஆ) பெரிட்டிமா

இ) சைகான்

ஈ) டீனியா சோலியம்

விடை: ஆ) பெரிட்டிமா


7. கண்ட அமைப்பு இதன் முக்கியப்பண்பு

அ) வளைத்தசைப் புழுக்கள் 

ஆ) முட்தோலிகள்

இ) கணுக்காலிகள்

ஈ) குழியுடலிகள்

விடை: அ) வளைத்தசைப் புழுக்கள் 


8. பெரிட்டிமாவில் இடப்பெயர்ச்சி இதன் உதவியுடன் நடைபெறுகிறது.

அ) வளையத் தசைகள்

ஆ) நீள வாட்டுத்தசைகள் மற்றும் சீட்டாக்கள்

இ) வளையத்தசைகள், நீள்வாட்டுத்தசைகள் மற்றும் சீட்டாக்கள்

ஈ) பாரபோடியா

விடை: இ) வளையத்தசைகள், நீள்வாட்டுத்தசைகள் மற்றும் சீட்டாக்கள்


9. இயற்கையில், மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களைக் கொண்ட உயிரிகள்

அ) பூச்சிகள்

ஆ) பறவைகள்

இ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

ஈ) பூஞ்சைகள்

விடை: அ) பூச்சிகள்


10. இவற்றுள் எது கிரஸ்டேஷிய உயிரி? 

அ) இறால் 

ஆ) நத்தை 

இ)கடற்சாமந்தி

ஈ) ஹைட்ரா

விடை: அ) இறால் 


11. கரப்பான் பூச்சியின் சுவாச நிறமி.

அ) ஹீமோகுளோபின் 

ஆ) ஹீமோசயனின்

இ) ஹீமோளஎரித்ரின்

ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை

விடை: ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை


12. எத்தொகுதி உயிரிகளின் புறச்சட்டகம் கைட்டினாலான கியூட்டிகிளைக் கொண்டுள்ளது?

அ) வளைத்தசைப் புழுக்கள்

ஆ) துளையுடலிகள் 

இ) கணுக்காலிகள் 

ஈ) முட்தோலிகள்

விடை: இ) கணுக்காலிகள் 


13. பக்கக்கோட்டு உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது.

அ) சலமான்டர்

ஆ) தவளை

இ) தண்ணீர் பாம்பு 

ஈ) மீன்

விடை: ஈ) மீன்


14. கால்களற்ற இருவாழ்வி

அ) இத்தியோஃபிஸ் 

ஆ) ஹைலா 

இ) ரானா

ஈ) சலமான்டர்

விடை: அ) இத்தியோஃபிஸ் 


15. நான்கு அறை இதயம் இதில் காணப்படும். 

அ) பல்லி 

ஆ) பாம்பு 

இ) தேள் 

ஈ) முதலை

விடை: ஈ) முதலை


16. இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு.

அ) மனிதர்கள் - யூரியோடெலிக்

ஆ) பறவைகள் - யூரிகோடெலிக்

இ) பல்லிகள் - யூரிகோடெலிக்

ஈ) திமிங்கிலம் – அம்மோனோடெலிக்

விடை: ஈ) திமிங்கிலம் – அம்மோனோடெலிக்


17. கீழ்க் காண்பவைகளில் எது முட்டையிடும் பாலுாட்டி?

அ) டெல்ஃபினஸ்

ஆ) மேக்ரோபஸ்

இ) ஆர்னிதோரிங்கஸ் 

ஈ) ஈகுவஸ்

விடை: இ) ஆர்னிதோரிங்கஸ் 


18. நுமேட்டிக் (காற்றறை கொண்ட) எலும்புகள் காணப்படும் உயிரி.

அ) பாலூட்டிகள்

ஆ) பறவைகள் 

இ) ஊர்வன

ஈ) கடற்பஞ்சுகள்

விடை: ஆ) பறவைகள் 


19. சரியான இணையைத் தேர்ந்தெடுத்துப் பொருத்துக


விடை: ஆ)



20. கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?

அ) மெல்லுடலிகள்

ஆ) முட்தோலிகள்

இ) கணுக்காலிகள்

ஈ) வளைத்தசைப் புழுக்கள்

விடை: ஆ) முட்தோலிகள்


21. எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? 

அ) ஃபைசாலியா - போர்த்துகீசியப் படைவீரன் 

ஆ) பென்னாடுலா -கடல் விசிறி

இ) ஆடம்சியா -கடல் பேனா

ஈ) கார்கோனியா-கடல் சாமந்தி 

விடை: அ) ஃபைசாலியா - போர்த்துகீசியப் படைவீரன்

11 வது விலங்கியல் : பாடம் 2 : விலங்குலகம்