Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | சரியான விடையை தேர்வு செய்யவும்

அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் - சரியான விடையை தேர்வு செய்யவும் | 11th Computer Science : Chapter 13 : Introduction to Object Oriented Programming Techniques

11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்

சரியான விடையை தேர்வு செய்யவும்

பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக - கணினி அறிவியல் புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் வினா விடைகள் - கணினி அறிவியல் : C++ பொருள் நோக்கு நிரலாக்க மொழி : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்

C++ பொருள் நோக்கு நிரலாக்க மொழி

அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்

மதிப்பீடு

பகுதி – அ

 

சரியான விடையை தேர்வு செய்யவும்.


1. பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு இனக்குழுக்களும் மற்றும் பொருள்களும் அடிப்படையாகக் கொண்ட நிரல் அணுகுமுறையை விவரிக்கிறது?

அ. OOP

ஆ. POP

இ. ADT

ஈ. SOP

[விடை: அ. OOP]

 

2. பின்வருவனவற்றுள் எது இந்த கருத்தியல் விதிமுறைகளின் மீது அதிக கவனம் செலுத்துகிறது?

அ. பொருள்நோக்கி நிரலாக்கம்

ஆ. நடைமுறை நிரலாக்கம்

இ. கூறுநிலை நிரலாக்கம்

ஈ அமைப்பு நிரலாக்கம்

[விடை: ஆ. நடைமுறை நிரலாக்கம்]

 

3. பின்வருவனவற்றுள் எது பயனர் வரையறுக்கும் தரவு வகை?

அ. இனக்குழு

ஆ. மிதவை

இ. முழு எண்

ஈ. பொருள்

[விடை: அ. இனக்குழு]

 

4. கீழ்கண்டவற்றுள் எது பண்பியல்புகளையும் தனிச் சிறப்பு பண்புகளையும் கொண்ட அடையாளம் காணத்தகு உருப்படி?

அ. இனக்குழு

ஆ. பொருள்

இ. கட்டமைப்பு

ஈ. உறுப்பு

[விடை: ஆ. பொருள்]

 

5. தரவுகளையும் செயற்கூறுகளையும் ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஒன்றாகப் பிணைத்து வைக்கும் செயல்நுட்பம்

அ. மரபுரிமம்

ஆ. உறைபொதியாக்கம்

இ. பல்லுருவாக்கம்

ஈ. அருவமாக்கம்

[விடை: ஆ. உறைபொதியாக்கம்]

 

6. தரவை நிரலின் நேரடி அணுகு முறையிலிருந்து பாதுகாப்பது

அ. தரவு மறைப்பு

ஆ. உறைபொதியாக்கம்

இ. பல்லுருவாக்கம்

ஈ. அருவமாக்கம்

[விடை: அ. தரவு மறைப்பு]

 

7. பின்வருவனவற்றுள் எந்த கருத்துரு ஒரு பொருளின் அவசியமான பண்புகளை உருவாக்கப்படும் பொருளுக்குள் மறைத்து வைக்கிறது?

அ. இனக்குழு

ஆ. உறைபொதியாக்கம்

இ. பல்லுருவாக்கம்

ஈ. அருவமாக்கம்

[விடை: ஈ. அருவமாக்கம்]

 

8. பின்வருவனவற்றுள் எது மரபுரிமத்தின் முக்கியமான பண்பாகும்?

அ. தரவு மறைப்பு

ஆ. உறை பொதியாக்கம்

இ. குறிமுறை மாற்றம்

ஈ. அணுகுமுறை

[விடை: ஆ. உறைபொதியாக்கம்]

 

9. ஒருமுறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல் - அதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?

அ. தரவு மிகைமை

ஆ. மறுபயனாக்கம்

இ. மாற்றம்

ஈ. தொகுத்தல்

[விடை: ஆ. மறுபயனாக்கம்]

 

10. எது வெளிப்படைத்தன்மை கொண்ட தரவுகளை உடையது?

அ. மரபுரிமம்

ஆ. உறைபொதியாக்கம்

இ. பல்லுருவாக்கம்

ஈ. அருவமாக்கம்

[விடை: அ. மரபுரிமம்]  

 

11வது கணினி அறிவியல் : அலகு 13 : அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள்