Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | குடிமக்களும் குடியுரிமையும்

அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - குடிமக்களும் குடியுரிமையும் | 8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : குடிமக்களும் குடியுரிமையும்

குடிமக்களும் குடியுரிமையும்

கற்றலின் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றுக் கொள்வதன் வாயிலாக மாணவர்கள் கீழ்க்கண்ட அறிவினை பெறுகின்றனர் >குடிமக்கள் மற்றும் குடியுரிமைக்கான பொருள் மற்றும் வரையறைகள் >இந்திய அரசியலமைப்பு சட்டம் >இந்தியக் குடியுரிமை பெறுதலும், இழத்தலும் >வெளிநாட்டுக் குடியுரிமையின் தன்மை >குடிமக்களின் உரிமைகளும், பொறுப்புகளும்

அலகு - 2

குடிமக்களும் குடியுரிமையும்



கற்றலின் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றுக் கொள்வதன் வாயிலாக மாணவர்கள் கீழ்க்கண்ட அறிவினை பெறுகின்றனர்

>குடிமக்கள் மற்றும் குடியுரிமைக்கான பொருள் மற்றும் வரையறைகள்

>இந்திய அரசியலமைப்பு சட்டம்

>இந்தியக் குடியுரிமை பெறுதலும், இழத்தலும்

>வெளிநாட்டுக் குடியுரிமையின் தன்மை

>குடிமக்களின் உரிமைகளும், பொறுப்புகளும்

 

அறிமுகம்

ஒரு நாட்டின் அரசாங்கத்தைப் பற்றியும், மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் படிக்கும் இயல் குடிமையியல் ஆகும். குடிமகன் (Citizen) என்ற சொல் 'சிவிஸ்' (Civis) என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பண்டைய ரோமாபுரியில் இருந்த நகர நாடுகளில் 'குடியிருப்பாளர்' என்பதாகும். நகர நாடுகள் அமைப்புகள் மறைந்த பின்னர் இச்சொல் நாடுகளின் உறுப்பினர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் குடிமக்கள் அனைத்து விதமான குடியியல், அரசியல் உரிமைகளை அனுபவிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.


குடிமகனும் குடியுரிமையும்

ஒரு அரசால் வழங்கப்பட்ட சட்ட உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிப்பவரும், அதே வேளையில் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பவரும், அவருக்கான கடமைகளை நிறைவேற்றுபவருமே அந்நாட்டின் குடிமகன் ஆவார். குடியுரிமை என்பது ஒரு குடிமகன் அவர் விரும்பும் காலம் வரையில் அந்நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதலே ஆகும்


குடியுரிமையின் வகைகள்

குடியுரிமை இரண்டு வகைப்படும்

1. இயற்கை குடியுரிமை: பிறப்பால் பெறக்கூடிய குடியுரிமை

2. இயல்புக் குடியுரிமை; இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955

இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், இழத்தலையும் பற்றிய விதிகளை இச்சட்டம் கூறுகிறது.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 2 : குடிமக்களும் குடியுரிமையும்