Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பனிப்போர்: அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் ஐக்கியத்திற்கும் இடையே ஏற்பட்ட எதிர்ப்பு

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - பனிப்போர்: அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் ஐக்கியத்திற்கும் இடையே ஏற்பட்ட எதிர்ப்பு | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

பனிப்போர்: அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் ஐக்கியத்திற்கும் இடையே ஏற்பட்ட எதிர்ப்பு

1. பொதுவுடைமையைக் கட்டுக்குள் வைக்க ட்ரூமெனின் வரையறை 2. மார்ஷல் திட்டம்

பனிப்போர்: அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் ஐக்கியத்திற்கும் இடையே ஏற்பட்ட எதிர்ப்பு


1. பொதுவுடைமையைக் கட்டுக்குள் வைக்க ட்ரூமெனின் வரையறை


கிழக்கு ஐரோப்பாவில் நாசிக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட நாடுகளில், சோவியத் இராணுவத்தால் 1948 முதல் பொதுவுடைமை அரசுகள் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவரான ட்ரூமென் பொதுவுடைமையை கட்டுக்குள் வைக்க ஒரு வரைவை முன் மொழிந்தார். சோவியத் நாடோ கிழக்கு ஐரோப்பா மட்டுமல்லாமல் உலகம் முழுதும் பொதுவுடைமைக் கருத்தைப் பரப்ப தீர்மானமாக இருந்தது.

பனிப்போர்: இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் நாட்டிற்கும் இந்நாடுகளின் நட்பு நாடுகளுக்குமிடையே மூண்ட விரோதம், பரபரப்பையே பனிப்போர் என்கின்றனர். அவை நேரடியாக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தவில்லை மாறாக அவர்கள் அரசியல் பொருளாதார சிந்தனைத் தளங்களைத் தேர்வு செய்துகொண்டனர்.


2. மார்ஷல் திட்டம்

மேற்கு ஐரோப்பிய நாடுகளை தன் செல்வாக்கினுள் வைத்துக் கொள்ள அமெரிக்க ஐக்கிய நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டம் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஏற்பட்ட வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், இடம் பெயர்வு போன்ற பிரச்சனைகளே மேற்கு ஐரோப்பாவிற்குள் பொதுவுடைமைக் கருத்து வளரக் காரணமாய் அமையும் என்று அமெரிக்க ஐக்கிய நாடு கருதியது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயலர் ஜார்ஜ் சி.மார்ஷல் ஐரோப்பாவின் சுய முன்னேற்ற முயற்சிக்குத் தம் நாடு பணஉதவி செய்யுமென்று அறிவித்தார். பதினாறு நாடுகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தன. நிர்வாக மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் அமெரிக்க ஐக்கியப் பொருளாதார ஒத்துழைப்பு நிர்வாகத்தின் கீழ் வழங்கப்பட்டன. நிதியுதவி வழங்கும் மார்ஷலின் திட்டமானது 1951இல் முடிவுக்கு வந்தது.



10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்