Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | தரவுகளை வரைபடங்கள் மூலமாக குறிப்பிடுதல்

தரவுகளை சேகரித்தல் - தரவுகளை வரைபடங்கள் மூலமாக குறிப்பிடுதல் | 5th Maths : Term 1 Unit 6 : Information Processing

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

தரவுகளை வரைபடங்கள் மூலமாக குறிப்பிடுதல்

சேகரித்த தகவல்களை அட்டவணைப்படுத்துவதால் கணக்கீடு செய்வது எளிமையாகிறது

தரவுகளை வரைபடங்கள் மூலமாக குறிப்பிடுதல்

 

1. தரவுகளை சேகரித்தல்

சேகரித்த தகவல்களை அட்டவணைப்படுத்துவதால் கணக்கீடு செய்வது எளிமையாகிறது

எடுத்துக்காட்டு 1

விளையாட்டு தின விழா

விளையாட்டு தின விழாவிற்கு பின்னர் உடற்பயிற்சி ஆசிரியர், ஐந்தாம் வகுப்பு மாணவர்களாகிய தினேஷ் மற்றும் கணேசனிடம் கலைந்துள்ள விளையாட்டுப் பொருள்களை ஒழுங்குபடுத்தச் சொன்னார். அவர்கள் இருவரும் கலைந்த விளையாட்டுப் பொருள்களை வகைப்படுத்தி கீழ்க்காணுமாறு ஒழுங்குபடுத்தி பொருள்களின் எண்ணிக்கையை அட்டவணைப்படுத்தினர்.


அவர்கள் பொருள்களை எவ்வாறு வரிசைப்படுத்தினார்கள் என்பதை பார்ப்போம்


குறிப்பு:

நிரைகள் கிடைமட்ட வரிசையாகவும் நிரல்கள் செங்குத்து வரிசையாகவும் இருக்கும் (அமைப்பு)

 

செயல்பாடு 1

ஒரு பள்ளியின் விளையாட்டு தின விழாவில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் கணித வடிவங்களை சேகரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. சகுந்தலா தேவியின் அணியானது அந்தப் போட்டியில் வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற அணி சேகரித்த வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


வெற்றி பெற்ற அணி சேகரித்த வடிவங்களை எண்ணி எழுதுவோம்?


 

எடுத்துக்காட்டு 2

பிரபு தன்னுடைய பிறந்த நாள் விழாவிற்கு வரும் தன் நண்பர்களுக்கு பரிசு தருவதற்காக, அவர்களுக்கு விருப்பமான பொருள்களின் விவரங்களை அவர்களிடம் இருந்து சேகரித்தான்.




செயல்பாடு 2

ஒரு வீட்டு உபயோக பொருள்களின் கடையில் அம்மாத கடைசியில் உள்ள இருப்புப் பொருள்கள் கீழ்க்காணும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட படத்தை உற்றுநோக்கி அட்டவணையை நிரைவு செய்க


பின்வரும் வினாக்களுக்கு விடையளி:

1. எத்தனை இருக்கைகள் இருப்பு பட்டியலில் உள்ளது?

விடை : 9

2. எந்த பொருள் கட்டிலின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது?

விடை : முக்காலிகள்

3. பட்டியலில் மொத்தம் எத்தனை பொருள்கள் உள்ளது?

விடை : 27

4. எத்தனை முக்காலிகள் உள்ளது?

விடை : 3

5. எந்த பொருள் முக்காலியின் எண்ணிக்கையை விட 3 அதிகமாக உள்ளது?

விடை : மேசைகள்

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்