இயல்பு வாயுக்களுக்கான அமுக்கத்திறன் காரணி
இயல்புவாயுக்களுக்கான அமுக்கத்திறன் காரணியினை பின்வருமாறு எழுதலாம்.
Z = PVஇயல்பு / nRT ---------- (6.17)
Vநல்லியல்பு = nRT / P ---------- (6.18)
(6.18) ஐ (6.17) ல் பிரதியிட
Z = Vஇயல்பு / Vநல்லியல்பு ---------- (6.19)

இங்கு, Vஇயல்பு என்பது இயல்பு வாயுக்களின் மோலார் கனஅளவு மற்றும் Vநல்லியல்பு என்பது அவ்வாயு நல்லியல்பு வாயுவாக செயல்படும் போது அதன் மோலார் கனஅளவு மதிப்பாகும்.