Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | திண்மம் மற்றும் திரவத்தின் அழுத்தப் பண்பை வாயுக்களின் அழுத்தத்தோடு ஒப்பிடுதல்.

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - திண்மம் மற்றும் திரவத்தின் அழுத்தப் பண்பை வாயுக்களின் அழுத்தத்தோடு ஒப்பிடுதல். | 6th Science : Term 1 Unit 3 : Matter Around Us

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

திண்மம் மற்றும் திரவத்தின் அழுத்தப் பண்பை வாயுக்களின் அழுத்தத்தோடு ஒப்பிடுதல்.

ஒரே மாதிரியான மூன்று நீர் உறிஞ்சும் குழாய்களை எடுத்துக்கொள். அதன் முனைகளை ஒரு மூடியினால் நன்கு மூடவும். பிஸ்டனை வெளியே எடுத்து, குழாயினை சுண்ணக்கட்டித் தூளால் நிரப்பு. பின்பு பிஸ்டனை வைத்து அழுத்த முயற்சி செய். நீ என்ன உற்றுநோக்குகிறாய்?

இரண்டாவது உறிஞ்சு குழாயில் நீரை நிரப்பு. பின்பு பிஸ்டனை அழுத்த முயற்சி செய். இதிலிருந்து என்ன அறிகிறாய்? மூன்றாவது உறிஞ்சு குழாயில் பிஸ்டனை இழுத்து காற்றை உறிஞ்சி பின்பு பிஸ்டனை அழுத்து. என்ன காண்கிறாய்? அழுத்துவது எளிதாக உள்ளதா அல்லது கடினமாக உள்ளதா? நீ உற்று நோக்கியவற்றை மற்ற குழுக்களுடன் பகிர்ந்துகொள்.

காற்று உள்ள உறிஞ்சு குழாயில் பிஸ்டனை எளிதில் அழுத்த இயலும் என்பதை நீ கவனித்திருப்பாய். நீரை அழுத்துவது கடினம் ஆனால் சுண்ணக்கட்டித் தூள் உள்ள பிஸ்டனை நகர்த்தவே இயலாது. திண்மம் மற்றும் திரவங்களை ஒப்பிடும்போது வாயுக்கள் அதிக அழுத்தத்திற்கு உட்படும் என இதன் மூலம் நாம் கூறலாம்.

சிந்திக்க

திண்மம் -> திரவம் -> வாயு

வாயு நிலையிலுள்ள பொருள்களை திரவ நிலைக்கு மாற்றும் நிகழ்வையே திரவமாக்கல் என்கிறோம். வாயுவிள் அழுத்தத்தை அதிகரிக்கும்போது மூலக்கூறுகள் நெருங்கி வந்து அதன் வெப்பநிலை குறைகிறது. எனவே மூலக்கூறுகளின் ஆற்றல் குறைந்து அவை வாயுநிலையிருந்து திரவநிலைக்கு மாறுகின்றன.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்