Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | தரவு இனங்களின் கருத்தாக்கம்

C++ ஓர் அறிமுகம் - தரவு இனங்களின் கருத்தாக்கம் | 11th Computer Science : Chapter 9 : Introduction to C++

11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்

தரவு இனங்களின் கருத்தாக்கம்

பின்வரும் எடுத்துக்காட்டை உற்று நோக்கவும் Name = Ram Age = 15 Average_Mark= 85.6

தரவு இனங்களின் கருத்தாக்கம் 


பின்வரும் எடுத்துக்காட்டை உற்று நோக்கவும் 

Name = Ram 

Age = 15 

Average_Mark= 85.6

மேலே கொடுக்கப்பட்டட எடுத்துக்காட்டில் Name, Age, Average_Mark என்பன புலங்கள் ஆகும். இதில் இருத்தப்பட்டுள்ள Ram,15,85.6 என்பவை அப்புலத்தின் மதிப்புகளாகும்.

செயல்முறை மொழியில் புலங்கள் மாறிகள் என்றும் மற்றும் மதிப்புகள் தரவுகள் என்றும் அழைக்கப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தரவும் வேறுபட்டதாகும். அதாவது "Ram” என்பது எழுத்துக்களின் வரிசை மற்ற இரண்டு தரவுகளும் எண்களாகும். முதல் மதிப்பு ஒரு முழு எண்ணாகவும், இரண்டாம் மதிப்பு ஒரு தசம எண்ணாகவும் உள்ளது. நடப்புலக பயன்பாட்டில் மிகவும் வேறுபட்ட தரவு இனங்களை நாம் அன்றாடம் கையாள்கிறோம். தரவுகளின் தன்மை அல்லது வகைகள் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக தூரம் (உன் வீட்டிலிருந்து பள்ளிக்கு) நுழைவுச் சீட்டின் விலை, பேனாவின் விலை, மதிப்பெண்கள், வெப்பநிலை மற்றும் பல.



11வது கணினி அறிவியல் : அலகு 9 : C++ ஓர் அறிமுகம்