Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | கருத்துரு வினாக்கள் விடைகள்

ஈர்ப்பியல் | இயற்பியல் - கருத்துரு வினாக்கள் விடைகள் | 11th Physics : UNIT 6 : Gravitation

11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்

கருத்துரு வினாக்கள் விடைகள்

இயற்பியல் : ஈர்ப்பியல் : புத்தக பயிற்சிக் கணக்குகள், தீர்க்கப்பட்ட எண்ணியல் கணக்குகள், தீர்வுகள் மற்றும் பதில்கள் : கருத்துரு வினாக்கள் விடைகள்

ஈர்ப்பியல் (இயற்பியல்)

கருத்துரு வினாக்கள்


1. கீழ்க்கண்ட அளவைகளில் எவை மாறிலி? 

அ) கோளின் நேர்கோட்டு உந்தம் 

ஆ) கோளின் கோண உந்தம் 

இ) கோளின் மொத்த ஆற்றல் 

ஈ) கோளின் நிலை ஆற்றல் 

விடை : ஆ) கோளின் கோண உந்தம் மற்றும் ஈ) கோளின் நிலை ஆற்றல்


2. ஓராண்டு காலத்தில் புவியின் மீது சூரியன் செய்த வேலையின் அளவு 

அ) சுழி

ஆ) சுழி அல்ல 

இ) நேர்குறி மதிப்பு உடையது 

ஈ) எதிர்குறி மதிப்பு உடையது 

விடை : அ) சுழி


3. குறிப்பிட்ட கால அளவில் சூரியன் புவி மீது செய்த வேலையின் அளவு எவ்வாறு இருக்கும்? 

அ) நேர்குறியாக, எதிர்குறியாக அல்லது சுழியாக 

ஆ) எப்போதும் நேர்குறி

இ) எப்போதும் எதிர்குறி

ஈ) எப்பொழுதும் சுழி

விடை : ஈ) எப்பொழுதும் சுழி


4. ஒரு வால்மீன் நிலாவின் மீது திடீரென மோதி நிலாவின் மொத்த ஆற்றலை விட அதிக. ஆற்றலை நிலாவுக்கு தந்தால் என்ன நிகழும்? 

விடை :

ஒரு வால்மீன் அதிக நிறை மற்றும் அதிக திசைவேகத்துடன் நிலாவின் மீது மோதினால் 

i) நிலா அழிந்து விடும் அல்லது 

ii) நிலாவை அதன் வட்டப்பாதையிலிருந்து வெளியேற்றி விடும்.


5. நிலாவின் மீதான புவியின் ஈர்ப்பு விசை திடீரென மறைந்தால் சந்திரனுக்கு என்ன நிகழும்? 

விடை :

நிலாவின் மீதான புவியின் ஈர்ப்புவிசை திடீரென மறைந்தால் நிலா புவியை சுற்றாது.


6. தற்போது புவி தன் சுழற்சி அச்சிலிருந்து - சாய்ந்து அமையவில்லை எனில், பருவக்காலங்களில் என்ன மாறுபாடு ஏற்படும்? 

விடை :

பருவக்காலங்களில் மாற்றம் நிகழாது. 


7. "கோடை காலமும் குளிர் காலமும் புவியில் ஏற்படுவது எவ்வாறு" என்ற வினாவுக்கு மாணவர் ஒருவர் புவி நீள்வட்டப்பாதையில் சுற்றும்போது, புவி சூரியனுக்கு அருகே வரும்போது (அண்மை நிலை) கோடை காலமும் சூரியனை விட்டு விலகி அதிகத் தொலைவில் உள்ளபோது (சேய்மைநிலை) குளிர் காலமும் தோன்றுகிறது என பதில் அளிக்கிறார். மாணவரின் பதில் சரியா? இல்லை எனில் கோடையும் குளிர் காலமும் தோன்றும் காரணத்தை விளக்குக. 

விடை :

மாணவரின் பதில் தவறானது. 

புவியானது சூரியனை 23.5° கோண சாய்வுடன் சுற்றி வருவதால் பருவ காலங்கள் தோன்றுகின்றன. 

23.5° சாய்வினால் புவியின் வட கோளப்பகுதி சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ளபோது, தென் கோளப் பகுதி சூரியனுக்கு அருகில் அமையும். 

எனவே வட கோளப் பகுதியில் குளிர்காலமாக உள்ளபோது தென்கோளப்பகுதியில் கோடை காலமாக இருக்கும்.


8. 2018 ஜனவரி 31 தேதி நடைபெற்ற சந்திர கிரகணத்தின் வெவ்வேறு நிலைகளை புகைப்படம் காட்டுகின்றது. இப்புகைப்படத்தின் அடிப்படையில் புவி கோள வடிவமுடையது என நிரூபிக்க முடியுமா?


விடை :

முடியாது.


11வது இயற்பியல் : அலகு 6 : ஈர்ப்பியல்