Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | இடம் பெயர்தலின் விளைவுகள்

அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இடம் பெயர்தலின் விளைவுகள் | 8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

இடம் பெயர்தலின் விளைவுகள்

இடம் பெயர்வானது குடியேற்றம் மற்றும் குடியிறக்கம் ஆகிய இரு பகுதிகளையும் பாதிப்படையச் செய்கிறது. இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:

இடம் பெயர்தலின் விளைவுகள்

இடம் பெயர்வானது குடியேற்றம் மற்றும் குடியிறக்கம் ஆகிய இரு பகுதிகளையும் பாதிப்படையச் செய்கிறது.

இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:


அ. மக்கள் தொகை விளைவுகள்

மக்கட் தொகை கூறுகளான வயது மற்றும் பாலினத்தில் இவ்வகை இடம்பெயர்வு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. திருமணத்திற்குப் பிறகு நடைபெறும் பெண்களின் இடம்பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதியில் பாலின விகிதம் குறையவும் திருமணமாகி செல்லுமிடங்களில் பாலின விகிதம் அதிகரிக்கவும் வழி வகுக்கிறது. வேலை தேடி செல்லும் ஆண் தொழிலாளர்களின் இடம்பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதிகளில் சார்ந்து இருப்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகின்றது.


ஆ. சமூக விளைவுகள்

பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி இடம் பெயர்வதால் பன்முக சமுதாயம் உருவாக இவை வழி வகுக்கின்றன. இது மக்கள் குறுகிய மனப்பான்மையில் இருந்து விடுபட்டு தாராள மனப்பான்மைக்கு மாற ஏதுவான சூழலை உருவாக்குகின்றது.


இ. பொருளாதார விளைவுகள்

அதிக மக்கள் தொகை நிறைந்த பகுதிகளிலிருந்து குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு அதிக மக்கள் இடம் பெயர்வதால் மக்கள் வள (Resource population) விகிதம் சமநிலையற்றதாகிவிடுகிறது. சில சமயங்களில் இவ்விரு பகுதிகளும் உகந்த (Optimum population) மக்கட் தொகையைக் கொண்ட பகுதிகளாக மாறவும் செய்கின்றன.

இடம்பெயர்வு ஒரு பகுதியிலுள்ள மக்கள் தொகையின் தொழில் கட்டமைப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் அப்பகுதியின் பொருளாதாரம் பாதிக்கிறது. அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain Drain) என்பது பின்தங்கிய நாடுகளைச் சார்ந்த தொழிற்திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடி வளர்ந்த நாடுகளுக்குச் செல்கின்றனர். இது இடம்பெயர்வின் ஒரு முக்கிய விளைவாகும். இதன்விளைவாகபூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைகின்றன. இது 'அறிவுசார் வெளியேற்ற விளைவு' (Back Wash Effect) என அழைக்கப்படுகிறது.


ஈ. சுற்றுச்சூழல் விளைவுகள்

ஊரகப்பகுதியில் இருந்து நகர்ப்புற பகுதிகளுக்குப் பெருமளவிலான மக்கள் இடம் பெயர்வதால் நகரங்களில் மக்கள் நெரிசலையும், வளங்கள் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது. இவ்விடப்பெயர்வு நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. நகர்ப்புற பகுதிகளின் மக்கள் பெருக்கம் காற்று, நீர் மற்றும் நிலம் ஆகியவை மாசு அடைய வழி வகுக்கிறது. குடிநீர் பற்றாக்குறை, போதிய குடியிருப்பின்மை , போக்குவரத்து நெரிசல் மற்றும் மோசமான வடிகால் அமைப்பு போன்ற சுற்றுச்சூழல் சவால்கள் நகர்புறங்களில் நிலவுகின்றன. குடியிருப்பு இடம்பற்றாக்குறை மற்றும் நிலமதிப்பு உயர்வு போன்றவை குடிசைவாழ் பகுதிகள் உருவாக வழி வகுக்கின்றன.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்