அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இடம் பெயர்தல் | 8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

இடம் பெயர்தல்

இடம் பெயர்தல் பற்றி பல வல்லுநர்கள் பல்வேறு முறைகளில் வரையறுத்துள்ளனர். ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தொலைவிற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும்.

இடம் பெயர்தல்

இடம் பெயர்தல் பற்றி பல வல்லுநர்கள் பல்வேறு முறைகளில் வரையறுத்துள்ளனர். ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தொலைவிற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல் எனப்படும். எனவே இடம் பெயர்தல் என்பது மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதைக் குறிக்கிறது.


ஐக்கிய நாடுகள் அமைப்பின் வரையறை

இடம்பெயர்வு என்பது இரு புவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒரு வகையான மக்கள்தொகை நகர்வாகும். இது பொதுவாக இருப்பிடத்தில் ஒரு வகையான நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

சமூக அறிவியலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று மக்கள் இடம் பெயர்தல் ஆகும். இது பழங்காலத்திலிருந்தே மனித குலத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இடம் பெயர்தல் என்பது மனித குலத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகும். பழங்காலத்தில் உணவைத்தேடி மக்கள் இடம் பெயர்ந்தனர். பெரும்பாலான மக்கள் காடுகளில் வாழ்வதை தவிர்த்து நாகரிக வாழ்க்கையைப் பின்பற்ற தொடங்கியபோது வளமான நிலம் மற்றும் வளர்ப்பு விலங்குகளுடன் உறவை மேம்படுத்திக் கொண்டனர்.

இதன் விளைவாக மனித குலம் இடம்பெயர்தலில் ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றமடைந்தது. அவர்கள் கிட்டத்தட்ட நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிரந்தர குடியிருப்புகளில் வாழத்தொடங்கினர். இந்நிலையில் மக்கள் வளம் மிகுந்த வேளாண் நிலத்தைத் தேடி தொடர்ந்து குடி பெயர்ந்தனர். அதன் பின்னர் இடம்பெயர்வின் தன்மை , காலத்திற்கு ஏற்றவாறு பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது.


எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்