Home | 8 ஆம் வகுப்பு | 8வது கணிதம் | சதுரம் வரைதல்

கேள்வி பதில்கள், தீர்வுகள் | வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - சதுரம் வரைதல் | 8th Maths : Chapter 5 : Geometry

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : வடிவியல்

சதுரம் வரைதல்

(i) ஒரு பக்கம் மற்றும் (ii) ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும்போது சதுரம் வரையும் முறைகளைக் காண்போம்.

சதுரம் வரைதல் 

(i) ஒரு பக்கம் மற்றும் (ii) ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும்போது சதுரம் வரையும் முறைகளைக் காண்போம்



1. ஒரு பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் போது சதுரம் வரைதல்

எடுத்துக்காட்டு 5.40

4 செ.மீ பக்க அளவு கொண்ட LAMP என்ற சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க

தீர்வு:

தரவு: பக்கம் = 4 செ.மீ


வரைமுறை:

1. LA = 4 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக

2. L இல், LX LA வரைக

3. L மையமாகக் கொண்டு, 4 செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக. அது LX P இல் வெட்டட்டும்.

 4. A மற்றும் P மையங்களாகவும், ஒவ்வொன்றும் 4 செ.மீ ஆரமுள்ள இரு வட்டவிற்கள் வரைக. அவை M இல் வெட்டட்டும்

5. AM மற்றும் PM இணைக்க. LAMP என்பது தேவையான சதுரம் ஆகும்.

பரப்பளவைக் கணக்கிடுதல்

LAMP என்ற சதுரத்தின் பரப்பளவு = a2 சதுர அலகுகள்.

= 4 × 4 = 16. .செ.மீ.



2. ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் போது சதுரம் வரைதல் 

எடுத்துக்காட்டு 5.41

8 செ.மீ அளவுள்ள மூலைவிட்டம் கொண்ட RAMP என்ற சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க

தீர்வு :

தரவு: மூலைவிட்டம் = 8 செ.மீ


வரைமுறை:

1. RM = 8 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக

2. RM இக்கு மையக்குத்துக்கோடு XY வரைக. அது RM 0 இல் இருசமக்கூறிடும். 3. O மையமாகக் கொண்டு, O இன் இருபுறமும் 4 செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் OX P இலும் மற்றும் OY A இலும் வெட்டுமாறு வரைக

4. RA, AM, MP மற்றும் PR இணைக்க

5. RAMP என்பது தேவையான சதுரம் ஆகும்.

பரப்பளவைக் கணக்கிடுதல்

RAMP என்ற சதுரத்தின் பரப்பளவு = a2 சதுர அலகுகள் = 5.7 × 5.7 = 32.49 .செ.மீ.

8 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 5 : வடிவியல்