Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | புதிய எண்களை உருவாக்குதல்

எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - புதிய எண்களை உருவாக்குதல் | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

புதிய எண்களை உருவாக்குதல்

9, 4, 8 மற்றும் 5 ஆகிய நான்கு இலக்கங்களைப் பயன்படுத்தி, இலக்கங்கள் மீண்டும் வராமல் 4 இலக்க எண்களை நாம் அமைக்க வேண்டும். பின்வரும் வரிசைகளில் வெவ்வேறு 4 இலக்க எண்கள் நமக்குக் கிடைக்கும்.

இவற்றை முயல்க

இவ்வாறே, ஆயிரமாவது இடத்தில் 4 என்ற எண்ணை நிலையாக வைத்தால் ஆறு வகையான நான்கு இலக்க எண்களை உருவாக்கலாம். இதைப் போன்றே மற்ற எண்கள் 8, 5 ஆயிரமாவது இடத்தில் நிலையாகக் கொண்டு மேலும் வெவ்வேறு 4 இலக்க எண்களை அமைக்கவும்.

தீர்வு : (i) ஆயிரமாவது இடத்தில் இலக்கம் 4 – பயன்படுத்த

இங்கு 4985 > 4958 > 4895 > 4859 > 4598 > 4589 

(ii) ஆயிரமாவது இடத்தில் இலக்கம் 8– பயன்படுத்த

இங்கு 8954 > 8945 > 8594 > 8549 > 8495 > 8459

(iii) ஆயிரமாவது இடத்தில் இலக்கம் 5– பயன்படுத்த

இங்கு 5984 > 5948 > 5894 > 5849 > 5498 > 5489 

99 + 1 = 100

செயல்பாடு

ஒரு காகித அட்டையை எட்டுச் சமப் பாகங்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு பாகத்திலும் வெவ்வேறு ஓரிலக்க எண்ணை எழுத வேண்டும். கிடைக்கும் எட்டு இலக்க எண்களைப் பட்டியலிடுக. மேலும் அவற்றுள் மிகப் பெரிய எண் மற்றும் மிகச் சிறிய எண்ணையும் எழுதுக.

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்