மனித உறுப்பு மண்டலங்கள் | பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - செரிமான மண்டலம் | 6th Science : Term 2 Unit 6 : Human Organ systems
செரிமான மண்டலம்
செரிமான மண்டலத்தில் உணவுக் குழாய் மற்றும் அதனுடன் இணைந்த செரிமானச்
சுரப்பிகளும் உள்ளன. இம்மண்டலமானது சிக்கலான உணவுப் பொருட்களை எளிய மூலக்கூறுகளாக மாற்றுதல்
மற்றும் செரிக்கப்பட்ட உணவை உட்கிரகித்தல் போன்ற செயல்களைச் செய்கிறது.
உணவுக்குழாயுடன் தொடர்புடைய செரிமான சுரப்பிகளாக உமிழ் நீர்
சுரப்பி, கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவை உள்ளன. இவை செரிமானப் பாதையில் உணவுச் செரிமானம்
நடைபெறுவதற்கு உதவியாக செரிமான நொதிகளைச் சுரக்கின்றன. உணவுக் குழாய் சுமார் 9 மீட்டர்
நீளமுடைய தசையாலான நீண்ட குழல் ஆகும். இரைப்பை செரிமானத்தின் பிரதான உறுப்பாக உள்ளது.
சிறுகுடலில் உட்கிரகித்தல் நடைபெறுகிறது.

